சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பேங்க் கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை காணவில்லை

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸின் வங்கி கணக்கில், செப்டம்பர் 2008 உடன் முடிந்த காலாண்டில் இருந்த தொகை ரூ.5,000 கோடியை அதன் பின் காணவில்லை என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

செப்டம்பர் 2008 முடிய உள்ள இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கையில், வங்கியில் ரூ.5,000 கோடி இருப்பதாக பேங்க் ஸ்டேட்மென்ட் தெரிவிக்கிறது. ஆனால் ஜனவரி மாதத்தில் கொடுத்த பேங்க் ஸ்டேட்மென்ட்டில் அந்த தொகை இல்லை என்று தெரிவிக்கிறது. நிதி மோசடியில் மாட்டிக்கொண்டிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், வங்கிகளில் குறைந்த கால மற்றும் நீண்ட கால பிக்ஸட் டெபாசிட்டாக ரூ. 3,300 கோடியை செப்டம்பருக்கு முன் முதலீடு செய்திருந்தது. மேலும் இன்னொரு 300 கோடி வட்டி வந்திருந்தது. இது தவிர கரன்ட் அக்கவுன்ட் டெபாசிட் ரூ.1,800 கோடி இருந்தது. பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம், கடைசியாக ஆடிட் செய்த, செப்டம்பார் 2008 உடன் முடிந்த காலாண்டு நிதி அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டெபாசிட்களில் உள்ள 90 சதவீத டெபாசிட்கள் ஜனவரி 7 ம் தேதி முடியக்கூடியதாக இருந்தது என்றும் தெரிய வந்திருக்கிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.