பாதுகாப்பு வலயங்களுக்கு சகல தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் – பான் கீ மூன்

வன்னியில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களுக்கு சகல தரப்பினரும் மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.


யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பு குறித்து சர்வதேச நியமனங்களுக்கு மதிப்பளிக்குமாறு அரசாங்க படையினர் மற்றும் விடுதலைப் புலிகளிடம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகக் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு வலயங்களில் பல சிவிலியன்களது சடலங்களை தமது பணியாளர்கள் அவதானித்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கும் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : www.newlankasri.com

Leave a Reply

Your email address will not be published.