காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி – ஹமாஸ்

காசாவில் அண்மையில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உறவினைர்களை அல்லது வீடுகளை இழந்த மக்களுக்கு பணம் வழங்கும் திட்டம் ஒன்றை தாம் ஆரம்பித்திருப்பதாக பாலத்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிலருக்கு 5000 டாலர்கள் வரை கிடைக்கும் என்று ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடிப்படை மனித நேய உதவிகள் தவிர்ந்த ஏனைய பெரும்பாலான விநியோகங்களையும் இஸ்ரேல் தடுப்பதால், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான உணவும், மருந்துமே கிடைப்பதாக வடக்கு காசாவில் உள்ள ஜபலயா முகாமில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : /www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.