அமெரிக்காவை விட இந்தியாவிற்கு சிறந்த நண்பன் யாருமில்லை:ஒபாமா!

வாஷிங்டன்: அமெரிக்காவை விட இந்தியாவிற்கு சிறந்த நண்பன் யாரும் இருக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 60வது குடியரசு தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தி வெளியிட்டார். அப்போது, இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தன்னுடைய மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார். அமெரிக்காவை விட இந்தியாவிற்கு சிறந்த நண்பனாக யாரும் இருக்க முடியாது என தெரிவித்த ஒபாமா, இந்திய நாடு தனது பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றம் அடைய, அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார். இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமாகும் என தெரிவித்தார். மேலும், காந்தியின் கொள்‌கை‌களை இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும், அவரது கொள்கைகள் எந்த ஒரு சவாலையும் எதிர்த்து நிற்கும் வலிமையை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ‌ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை தழைக்க அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.