பிரபாகரன் இலங்கையை விட்டு தப்ப முடியாது: டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாது. அவரை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வருகின்றனர் என்று இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பலமுறை இலக்காகி உயிர் பிழைத்தவர் டக்ளஸ். ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார்.

பிரபாகரன் குறித்து அவர் கூறுகையில், பிரபாகரனை பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட வளைத்து விட்டனர். அவரால் இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முடியாது.

வன்னியில் பங்கர் பங்கராக மாறிக் கொண்டிருக்கிறார் பிரபாகரன். ஆனால் அவரால் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாது.

மறைவதற்கு அவருக்கு இனியும் இடம் இல்லை. கிட்டத்தட்ட அவர் பொறியில் சிக்கி விட்டார். அவர் மலேசியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ தப்பியிருக்க முடியாது. வன்னியில்தான் அவர் பதுங்கியிருக்கிறார் என்றார் டக்ளஸ்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.