யாழ். பல்கலைக்கழக பணியாளர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்விடுதியின் உப மேற்பார்வையாளர் ஒருவர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 1.45 மணியளவில் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவர் பொற்பதி வீதி கொக்குவிலில் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் உள்ள தாயாரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருக்கையில்கோண்டாவிலில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த மாணிக்கம் பிரேமச்சந்திரன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.இவர் யாழ் பல்கலைக்கழக ஆனந்தகுமாரசாமி ஆண்கள் விடுதி வார்டனாகக் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்துள்ளவருக்கு இனந்தெரியாதோர் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பணியாட்கள் என பலரும் தொடர்ந்து இவ்வாறு இனந்தெரியாதவர்களினால் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.