மக்கள் பாதுகாப்பு வலய”த்தில் ஐ.நா.வால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள் பெறக் காத்திருந்த மக்கள் மீது பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலி; 60 பேர் காயம்

பாதுகாப்பு வலயம் என தானே அறிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதிக்குள் வன்னி மக்களை திரளச் செய்த சிறிலங்கா அப்பகுதியின் மீது தொடர்ச்சியான பீரங்கி தாக்குதலை நடத்தி பெரும் இனப் படுகொலையை மெதுவாக நிகழ்த்தி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த “மக்கள் பாதுகாப்பு வலய”த்தில் – ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காகக் காத்திருந்த பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடையார்கட்டு மற்றும் தேராவில் பகுதிகளில் – ஏற்கெனவே இடம்பெயர்ந்து வீதியோரங்களில் தங்கியிருந்த பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களிலுமாக 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலதிக விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : /puthinam.com

Leave a Reply

Your email address will not be published.