எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல-இரா.சம்பந்தன்

எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிறு லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள். தமிழ் மக்களுக்காகவே நாம் செயற்படுகிறோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என யாராவது நினைத்தால் அது தவறானது.

தமிழர் தொடர்பான நலன்களை நாம் பேணுவதன் காரணமாக மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோம். இந்தத் தொடர்பு கூடத் தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. இது தவிர நாம் பயணிப்பது ஜனநாயக வழியிலேயே.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை. அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது. யுத்தம் செய்யும் தேவை புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண புலிகள் தயாராகவிருந்தார்கள். ஆனால் அவர்களை யுத்தத்துக்கு வலிந்து அழைத்தது இன்றைய அரசாங்கமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.