சொன்னதை செய்த புலிகள்: தத்தளிக்கும் ராணுவத்தினர்(விளக்கப்படம்)

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளை தாக்கிக்கொண்டே முன்னேறிச்சென்றது ராணுவம்.  பின்வாங்கிக்கொண்டே வந்தனர் புலிகள்.

ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு அணைக்கட்டின் பக்கம் ராணுவத்தினர் வந்த போது புலிகள் அணையை உடைத்துவிட்டனர்.

பீறிட்டெழுந்த தண்ணீரில் சிங்களப்படையினர் திணறியிருக்கிறார்கள்.  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்திணறலில் இறந்துள்ளனர்.

இன்று இரவு இந்த தாக்குதல் முடிந்துள்ளதால் இதுவரை 500 சிங்களப்படையின் சடலங்களை மட்டுமே புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தண்ணீரில் சிங்களப்படையின் ஆயுதங்கள் அடித்துச்செல்லப்பட்டிருக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விரைவில் வெற்றி செய்தி வரும் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.சொன்னது போல்வே இன்று செய்து முடித்துள்ளனர் புலிகள்.

Source & Thanks :  nakkheeran.in

Leave a Reply

Your email address will not be published.