புலிகள் பதிலடி: 1500 ராணுவத்தினர் பலி- பெருமளவு ராணுவத்தினர் சிக்கினர்?

முல்லைத்தீவில் விஷ்வமடு பகுதியில் இன்று விடுதலைப்புலிகளை தாக்கும் தீவிரத்தில் சிங்கள ராணுவம் முன்னேறியதாகவும், அவர்களை முன்னேற விடாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாகவும் இலங்கை பத்திரிக்கை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும்,  இன்று மதியம் 3மணிக்கு தொடங்கிய இந்த பதிலடி தாக்குதல் மாலை 6மணிக்கு முடிந்ததாகவும்,  இந்த பதிலடி தாக்குதலில் 1500 ராணுவத்தினர் பலியானதாகவும்,   பெருமளவு ராணுவத்தினர் காயங்களுடன் தப்பி ஓடியதாகவும் அவர்களை விடுதலைப்புலிகளின் தடுப்புகளால் அவர்கள் ஓட முடியாமல் சிக்கித்தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலியான ராணுவத்தினரில் 500 சடலங்கள் மட்டுமே புலிகள் கைப்பற்றியுள்ளனர்.   இரவு வந்துவிட்டதால் சடலங்களை தேட முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்னும் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை.

Source & Thanks :  nakkheeran.in

Leave a Reply

Your email address will not be published.