`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (24.01.09) செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களில் 167 பேர் கடத்தப்பட்டும், காணாமல்; போயுமுள்ளனர். இவர்களில் பலர் வீடுகளில் வைத்து ஆயுத முனையில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்டும், காணாமல் போயுமுள்ளவர்களில் வர்த்தகர்கள், கடற்தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குகின்றனர். இவர்களில் பலர் வீடுகளில் வைத்து ஆயுத முனையில் விசாரணைக்மென அழைத்துச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். ஏனையோர் தங்களுடைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியில் சென்ற வேளை, காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுமிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது..

இவ்வாறு காணாமல் போனவர்கள் மீண்டும்; என்றாவது ஒருநாள் வருவார்கள் என உறவினர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக மன்னார் மாவட்டத்தில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு ஒன்றின் தகவல்கள் தெரிவிக்கின்றன..

அதே வேளை, இவ்வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் மனிதாபிமான பணியாளர் ஒருவர்மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!
கல்மடு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பிற்பகல் வரை நடைபெற்றது.
இதில் சிதைந்த நிலையில் 3 படையினரின் உடலங்கள் விடுதலைப் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டன.
ஏகேஎல்எம்ஜி – 01
ரி-56-2 ரக துப்பாக்கிகள் – 02
கிளைமோர்-1
உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ள
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
கிழக்கு பல்கலைக்கழக மாணவன் கல்வி நடவடிக்கை தொடர்பாக கொழும்பில் உள்ள பல்கலைக்கழங்க மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு சென்று தனது நணபனின் வீட்டுக் சென்றபோது காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு குருந்துவத்தை பகுதியில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு சென்ற வேளையில் காவல்துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் தம்பையா வீதியை சேர்ந்த 23 அகவையுடைய கைலைநாதன் புருசோத்மன் என்ற இரண்டாம் கல்வியாண்டு மாணவனே கைதுசெய்யப்பட்டுள்ளான்.
சந்தேகத்தின்பேரிலேயே கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்த குருந்துவத்தை காவல்துறையினர் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!
தேவிபுரம் மஞ்சள் பாலத்தடியில் இன்று 1.00 மணியளவில் சிறிலங்காப் படையினர் அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து பல்குழல் எறிகணைவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர்விபரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தினால் இப்பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்தும் சிறிலங்காப் படையினர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் சமாதான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெருமளவிலான ஆட்கடத்தல்களும், இனப்படுகொலைகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த முன்னெடுப்புகளினால் பொதுமக்கள் பலர் பலியாகியும் வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த சில மாதங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக குறிப்பிடத் தக்க வெற்றிகளை பெற்றுள்ளது. இதில் கிளிநொச்சியைக் கைப்பற்றியதும் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த வெற்றிகளை வைத்துக் கொண்டு அரசியல் தீர்வு ஒன்றுக்குச் செல்வதே அவசியமானது என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் முன்வைக்கப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, தமிழ்,சிங்கள, முஸ்லிம் சமூகங்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் பிரிட்டன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை வழங்கும் முகமாக 2.5 மில்லியன் பவுண்களைப் பிரிட்டன் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில் இதனை வழங்குவதற்கு முன்னர் களநிலவரத்தை ஆராயும் முகமாக பிரிட்டிஷ் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்பவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் திருப்திகரமாக அமையவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 14 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடொன்றில் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடக அடக்குமுறைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எவ்வித தண்டனைகளும் வழங்கப்படாமையின் ஊடாக நாளுக்கு நாள் இவ்வாறான மோசமான சம்பவங்கள் நாட்டில் அதிகரிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!
ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீதான தாக்குதலுக்கு 5 ஊடக அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சம்மேளனம் ஆகியவை இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுதம் தரித்த இனந்தெரியாத குழுக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்படுவதால் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களினதும் சுதந்திரமாக வாழும் உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு அதிகாரம், ஆகியவற்றுடன் நீதிமன்றமும் தலையிட்டு இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏனைய குற்றச்செயல்கள், சம்பவங்களை உடனடியாக கண்டுபிடிக்கும் பொலிஸார், சி..டி.யினரால் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும், தாக்கப்படும், கடத்தப்படும் சம்பவங்களை மட்டும் கண்டுபிடிக்க முடியாமலிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதால் அவர்களுக்கு வி..பி. களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.
பொலிஸாரும் சி..டி. யினரும் எல்லாக் குற்றச்செயல்களையும் உடனடியாக கண்டுபிடிக்கின்றனர். ஆனால், ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், கொலைகள் மட்டும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாமலிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சுவரொட்டிகளை ஒட்டிய எமது உறுப்பினர்களை கைது செய்யும் பொலிஸாரால் குற்றவாளிகளைத் தான் பிடிக்க முடியாதுள்ளது.
எம் எல்லோருக்கும் உயிர் மீது ஆசை இருப்பதைப் போலவே ஊடகவியலாளர்களுக்கும் அவர்கள் உயிர் மீது ஆசையுள்ளது. இவ்வாறான நிலையில் அவர்கள் தாக்கப்பட்டால், கொலை செய்யப்பட்டால் அவர்கள் செய்திகளை வெளியிட மாட்டார்கள். இதனால், மக்களுக்கு உண்மை நிலை தெரியாமல் போகும்.vd ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
பரந்துபட்ட அரசியல் விவகாரங்களில் குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் இலங்கையும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் கொள்கைகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் ஆலயக் குருக்களின் மகள் வெள்ளைவானில் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக ஐனநாயக மக்கள் முன்னணியிடம் முறையிடப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் ஆலய குருக்களான தாமோதர ஐயரின் மகளான காமகோடிகா(வயது22) என்பவரே கடந்த 22 ஆம் திகதி கொட்டாஞ்சேனை வாசல வீதியிலுள்ள ஆலயத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
எதி6324 என்ற இலக்கம் பொருந்திய வெள்ளை வானில் வந்த 6 பேர் கொண்ட ஆயுதம் தரித்த குழுவினராலேயே இவர் கடத்தப்பட்டுள்ளார்.
இவரது தகப்பனார் கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் குருக்களாக கடமைபுரிகிறார். இவரது தாயாரும் தகப்பனாரும் இந்தியாவிற்கு சென்று சபரிமலை யாத்திரையை முடித்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்த தினத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் நடைபெறும் பொழுது காமகோடிகாவும் அவரது சகோதரியும் மாத்திரமே தேவஸ்தான வாசஸ்தலத்தில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் முதலில் இல்ல அதிகாரியை ஆயுதமுனையில் மிரட்டியுள்ளார்கள்.
அதன் பின்னர் குடியிருப்பிற்கு சென்று அதிக நேரமாக கதவைத் தட்டியுள்ளார்கள். இவரும் இவரது சகோதரியும் கதவைத் திறக்க மறுத்தபொழுது தாங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்கள்.
இவர்கள் இருவரையும் விசாரித்த இனந்தெரியாத நபர்கள் இவரது சகோதரியை தள்ளிவிட்டு காமகோடிகாவை மாத்திரம் பலவந்தமாக கடத்தி சென்றுள்ளதாக காமகோடிகாவின் தகப்பனார் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கொட்டாஞ் சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளுக்காக இம்முறைப்பாடு மக்கள் கண்காணிப்புக்குழுவின் காணாமல்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
மலேசியாவில் இருந்து நான்கு இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விஸா அனுமதியின்றி மலேசியாவில் தங்கியிருந்த இந்த நால்வரும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்களை விசாரணைக்குட்படுத்திய விமான நிலைய அதிகாரிகள் நால்வரையும் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நால்வரும் வேலை வாய்ப்புத் தேடி மலேசியா சென்றதாகவும் இது பற்றி மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் கட்டுநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரி பிரஸாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கைதான நால்வரில் ஒரு தமிழர் ஒரு முஸ்லிம், இரு சிங்களவர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
!!!!!!!!!!!!!!!
வவுனியாவில் ஆயிரம் ரூபா போலித்தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டுமென மாவட்ட நீதிவான் .ஜி. அலெக்ஸ்ராசா அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று வவுனியாவில் ஆயிரம் ரூபா நோட்டுக்களை வங்கியில் வைப்பிலிட சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இவர்களை ஐம்பதினாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் அடுத்த மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் சமுகமளிக்கவேண்டுமென இவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்போதே போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமெனத் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!
இலங்கையில் தமிழ் பொதுமக்கள் தொடர்பான மனிதாபிமான காரணிகளைக் கருத்திற் கொண்டு போர் நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஜெர்மன் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் நிவாரணங்களை வழங்கி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களினால் ஜெர்மனிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், எந்தக் காரணத்திற்காகவும் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படமாட்டாதென அரசாங்கம் திட்டவடட்மாக அறிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்கத் தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பானஅமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்என்ற குழுவினர் அமெரிக்க நேரப்படி நேற்று நண்பகல் 12 மணிக்கு அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் முன்பாக பேரணியை ஆரம்பித்தனர்.
இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தக் கவனஈர்ப்புப் பேரணியின் போது இந்தியப் பிரதமருக்கு விலாசமிடப்பட்ட மகஜர் இங்குள்ள இந்தியத் தூதர் ராஜ் மல்கோத்திராவிடம் கையளிக்கப்பட்டது.
பேரணியில் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரமுகர் .உருத்திரகுமார் விசேட உரையாற்றினார். வன்னிமீது தற்போது படையினர் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என்று கோரியே இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சுலோக அட்டைகளை மக்கள் தாங்கியிருந்தனர். இதேவேளை இந்தப் பேரணி முடிந்தபின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முன்பும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வன்னியில் இடம்பெறும் படுகொலையை நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரணியினர் கோஷம் எழுப்பினர
!!!!!!!!!!!!!!!!!
New;W மாலை பாரிஸ் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 4000 ற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு தாயகத்தில் அல்லலுறும் தம் உறவுகளுக்கு தமது நேசக்கரத்தை நீட்டியுள்ளனர்.
மாலை 17.00 மணிக்கு ஆரம்பமான இவ் மனித சங்கிலிப் போராட்டம் மாலை 18.30 மணிவரை இடம்பெற்றது.

தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் அணிதிரண்டு நின்றனர். குளிரான கால நிலை நிலவிய போதும் ஆண்கள், பெண்கள், மாணவர் என அனைவரும் ஒன்றுதிரண்டு அணிவகுத்து நின்று
எங்கள் தலைவர் பிரபாகரன்
எங்கள் தேசம் தமிழீழம்
கெசோவே மக்கள் போன்றே தமிழரும் போன்ற கொட்டொலிகளை ஒலித்தனர்.

சகல வர்த்தக நிறுவனங்களும் மாலை 17.00 மணி தொடக்கம் 18.00 மணிவரை தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு இந்தப் போராட்டத்தில் கைகோர்த்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; ,d;W khiy 5 kzpapypUe;J 6kzptiu ,isNahh; Nguitapdh ;thuthuk; rdpfpoikfspy; elhj;Jk; xd;W$ly; ,d;Wk;metro la chapelle mUfpy; ,lk;ngWk; vd nra;jpfs; njuptpf;fpd;wd.
!!!!!!!!!!!!!!!!!!!
india

தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வோம் என்று எழுதி கொடுக்கும் கட்சியுடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். அதே நேரத்தில் அந்த கூட்டணி தேசிய கட்சியுடன்தான் இருக்குமே தவிர, மாநில கட்சியுடன் கூட்டணி இருக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். .

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் இன்று தேமுதிகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் செழியன் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் விஜயகாந்த் பேசியதாவது:

கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் என்ன பேசப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவுகளால் தேமுதிக துவண்டு விட்டது என்று சிலர் பேசுகிறார்கள். விஜயகாந்த் எப்போதும் துவள மாட்டான். எதிரிகளுக்கு சவால்விட்டுதான் எனக்கு பழக்கம். என்னைபோல்தான் என் கட்சி தொண்டர்களும் இருக்கிறார்கள். திமுகவிற்குதான் தோல்வி பயம் இருக்கிறதே தவிர எனக்கு இல்லை.

திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றி சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் கூறுகிறார். ஒரு இடைத்தேர்தலுக்காக அமைச்சர் களையும், எம்எல்ஏக்களையும் அனுப்பி பணம் கொடுத்து ஓட்டுவாங்கியதுதான் சாதனையா?

இது சாதனை இல்லை; வேதனை. கருணாநிதிக்காகவோ அவரது மகன் அழகிரிக்காகவோ அங்குள்ள மக்கள் ஓட்டுப்போடவில்லை. அவர்கள் கொடுத்த பணத்திற்காகத்தான் ஓட்டுப்போட்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடந்திருப்பதாக திமுகவினர் கூறுகிறார்கள். அப்படி நியாயமாக நடந்திருந்தால் ஒரு ஓட்டுக்கு ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரை கொடுத்திருக்கிறீர்களே இதுதான் நியாயமா?

இடைத்தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டுவாங்கி விட்டீர்கள். ஆனால் பொதுத் தேர்தலில் திமுகவால் இவ்வாறு பணம் கொடுத்துவிட முடியுமா? கண்டிப்பாக முடியாது. என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்

!!!!!!!!!!!!!!

அதிமுக ஆடசிக் காலத்தில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டிவி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்ட 3 பேரை சென்னை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. .

!!!!!!!!!!

இலங்கையில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இறுதி தீர்மானம் New;W நிறைவேற்றப்பட்டது. இன்றே போர் நிறுத்தத்தை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் திமுக பொதுக்குழுவை கூட்டி விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார். இந்த பிரச்சனைக்காக ஆட்சியை இழப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். .

தமிழக சட்டசபையில் இன்று இலங்கை தமிழர் பிரச்சனை தொடர் பாக தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒரு நாடகம் என்று கூறி அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திமுகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பட்டியலில் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த தயாநிதி மாறன், கனிமொழி, கயல்விழி ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக, முன்னாள் மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக உள்ள மு.. ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வருவார்.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தமிழச்சி தங்கபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.. அழகிரியின் மகள் கயல்விழிக்கு, மகளிர் பிரச்சாரக் குழு செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதிக்கு, தேர்தல் பணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வரதராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது

சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த ஆலோசனையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக- மார்க்சிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் தெலுங்கு தேசம், டி.ஆர். எஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய வரதராஜன், ‘தற்போதைய தேசிய- மாநில அரசியல் நிலவரம் குறித்து ஜெயலலிதாவுடன் விவாதித்தேன்’ என்றார்.

!!!!!!!!!!!!!!!!!!!

குடியரசு தின விழாவின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்திருப்பதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று புதிய அறிவுரை கடிதம் ஒன்றை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது. .

அந்த ஒன்றரை பக்க கடிதத்தில், குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு இவை நிகழா வண்ணம் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், மத்திய உள்துறை செயலாளர் மதுக்கர் குப்தா மற்றும் உளவுத்துறை இயக்குநர் ராஜீவ்மாத்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

!!!!!!!!!!!

சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா அரசே, இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்து”
” இந்திய அரசே, போர் நிறுத்தத்திற்கு சிறிலங்கா அரசை நிர்ப்பந்தம் செய்”
என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மெமோறியல் மண்டபம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், ..டி.யூ.சி. மாநில செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், சென்னை மாவட்ட செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

!!!!!!!!!!!!!!!

ஈழத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 3 லட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லை எனில், உலகிலேயே கொடூரமான மனித படுகொலை முல்லைத்தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.
முதலமைச்சர் கருணாநிதி பல சமயங்களில் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோளை தற்போது சட்டசபை மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பிரச்சினை என்றால், அனைவரும் ஓரணியில் திரள்வோம். ஒட்டுமொத்த சமூகமும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து, இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவர வழிவகை செய்யவேண்டும் என்றார் அவர்.

!!!!!!!!!!!!!!

புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக தினமலர் நாளிதழ் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ் சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட இலங்கை அதிபரின் உருவ பொம்மையை சிலர் கடந்த 19ம் தேதி கட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். ராஜீவ் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் புதுவையை அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தினமலர் பத்திரிகையின் பாகூர் நிருபர். அவரிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் ராஜா(29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து சீனியர் எஸ்.பி. அகர்வால் கூறியதாவது:
ராஜீவ் சிலை அவமதிப்பு தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் செல்போன் எண் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். 19ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு ராஜீவ் சிலை அருகில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்ணை தொடர்பு கொண்டபோது பாகூர் குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பது தெரியவந்தது. விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக இவர் கூறினார். தீவிர விசாரணையில் சிலை அவமதிப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். ராமசாமியின் சித்தப்பா மகன் ராஜா(29) என்பவர் உதவியாக உடன் இருந்து இருக்கிறார். பைக்கில் உருவ பொம்மையை கொண்டு வந்து இருக்கின்றனர். உருவ பொம்மையை ராஜா தூக்கிவிட ராமசாமி, சிலையில் கட்டியிருக்கிறார்.
இவ்வாறு அகர்வால் கூறினார்.
கைதான தினமலர் நிருபர் ராமசாமி, ராஜா ஆகியோரை புதுச்சேரி குற்றவியல் நீதிபதி சுதா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

!!!!!!!!!!!!

ராஜீவ் சிலை அவமதிப்பு நிகழ்வு தொடர்பாக குற்றவாளி யார் என அடையாளம் காணும் முன் விடுதலை சிறுத்தைகளை அத்துடன் இணைத்து தினமலர் நாளிதழ் அவதூறு பரப்பியது. இப்போது கைதாகி உள்ள ராமசாமி, ராஜா ஆகிய இருவரும் தலித் அல்லாதவர்கள் என்பதும், அதில் ராமசாமி என்பவர் தினமலர் நிருபர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதில் நிருபர் மட்டும் பொறுப்பாக இருக்க மாட்டார். தினமலர் ஆசிரியரும், வெளியீட்டாளரும் இதன் பின்னணியில் இருப்பதாக ஐயப்படுகிறோம். இதை தீவிரமாக விசாரிக்கவேண்டும். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இடையே கடுமையான முரண்பாட்டை உருவாக்கி, புதுவைதமிழகத்தில் மிக மோசமான வன்முறையை தூண்ட வேண்டும் என்பதும், அதன்மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதும் அவர்களது உள்நோக்கமாக உள்ளது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!

நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் துவங்கப்பட்ட இந்த இருதய அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நடைபெறும் எனத் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற ராம்கன்ட் பாண்டே தலைமையிலான 11 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரதமருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் பிரதமருக்கு முதல் முறையாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பூரண நலத்துடன் இருந்து வந்த பிரதமர், கடந்த சில நாட்களாக மீண்டும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பிரதமருக்கு இருதயத்தின் சில பகுதிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!

இந்திய அரசை பணிய வைத்து ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டுமானால் தமிழகத்தில் தி.மு.. ஆட்சியை காப்பாற்ற பா..., .தி.மு.., இடதுசாரிகள் விரைந்து முன்வரவேண்டும் எ‌ன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வே‌ண்டுகோ‌ள்விடு‌த்து‌ள்ளா‌ர்

!!!!!!!!!!!

திரை‌ப்பட‌ங்க‌ளி‌ல் புகை‌பிடி‌க்கு‌ம் கா‌ட்‌சிகளு‌க்கு‌த் தடைவி‌தி‌க்கு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் உ‌த்தரவு பட‌ இய‌க்குர்க‌ளி‌ன் அடி‌ப்படை உ‌ரிமைகளான கரு‌த்து சுத‌‌ந்‌‌திர‌ம் பே‌ச்சு சுத‌ந்‌திர‌ம் ஆ‌கியவ‌ற்றைமீறுவதா‌ல் அ‌‌‌‌து செ‌ல்லாது எ‌ன்று டெ‌ல்‌லி உய‌ர்நீ‌திம‌ன்ற‌ம்தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ல் புகை‌பிடி‌க்கு‌ம் கா‌‌ட்‌சிகளு‌க்கு‌த் தடைவி‌தி‌த்து கட‌ந்த 2006 ஆ‌ம் ஆ‌‌ண்டு அ‌க்டோப‌ர் மாத‌ம் ம‌த்‌திய அரசு உ‌த்தர‌வி‌ட்டது. இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து பா‌லிவு‌ட் இய‌க்குந‌ர் மகே‌ஷ் ப‌ட் டெ‌ல்‌லி உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்கைவிசா‌ரி‌த்தநீ‌திப‌தி ச‌ஞ்ச‌ய்கிஷா‌ன் கா‌ல்,”படை‌ப்பா‌ற்றலை‌ இடையூறு செ‌ய்வத‌ன் மூல‌ம் அ‌திகா‌ரிக‌‌ள் பட இய‌க்குந‌ர்க‌ளி‌ன் மூ‌ச்சு‌க்குழலை நெ‌ரு‌க்க‌க் கூடாது. ம‌த்‌திய அர‌சி‌ன் உ‌த்தரவு பட‌ இய‌க்குர்க‌ளி‌ன் அடி‌ப்படை உ‌ரிமைகளான கரு‌த்து சுத‌‌ந்‌‌திர‌ம் பே‌ச்சு சுத‌ந்‌திர‌ம் ஆ‌கியவ‌ற்றைமீறுவதா‌ல் அ‌‌‌‌து செ‌ல்லாதுஎ‌ன்றுதீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

!!!!!!!!!!!!!!

world

 

இணையதளங்களில் ஆபாசத்தை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 1,250 இணையதளங்களுக்கு சீனா தடைவிதித்துள்ளது.

தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த இணையதள விவகாரத்துறை அமைச்சகத்தின் இணை இயக்குனர் லியு, இதுதொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 5ஆம் தேதி துவங்கிய ஆபாச இணையதள ஒழிப்புப் பணியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அதிகாரிகள் ஈட்டியிருந்தாலும், இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களான கூகிள், பைடு, சினா, சோஹு ஆகியவை தங்கள் தளங்களில் ஆபாசமான விடயங்கள் இடம் பெறுவதைத் தவிர்க்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இம்மாதத் துவக்கத்தில் சீன அரசு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!

 

பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் மீது சர்வதேச நாடுகள் ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள முஷாரப் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். பயங்கரவாத செயல்களை ஒழிப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாகவும், ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாமல், சர்வதேச நாடுகள், பாகிஸ்தானை ஓரவஞ்சனையுடன் நடத்துவதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். வடமேற்கு பாகிஸ்தானில், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அமெரிக்கா ஏவுகணைகளை வீசிவருவதாகவும், ஆனால், அதில், அப்பாவி மக்கள்தான் அதிகளவில் பலியாகி வருவதாகவும் முஷாரப் குற்றம்சாட்டினார். எனவே, இந்த தாக்குதல் குறித்து, அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஒபாமா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

!!!!!!!!!!!!!!!!

பல்வேறு நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவின் நிர்வாகம் பல்வேறு நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேச்சு நடத்துகிறது. .

அதிபர் பாரக் ஒபாமா நேற்று கனடா, சவூதி அரேபியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார்.

இதனிடையே நேற்று முன்தினம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியுடன் பேசிய அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நேற்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தொலைபேசியில் பேசினார்.

பிரிட்டன் பிரதமருடன் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் பிரச்சனைகள் குறித்து ஒபாமா பேசினார்.

பான் கி மூனிடம் பேசியபோது, அமெரிக்காஐநா உறவு தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்று உறுதி அளித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

!!!!!!!!!!!!!!

ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் மேலும் 20 ஆயிரம் கடற்படை வீரர்கள் அனுப்பப்பட இருப்பதாக அமெரிக்க ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். .

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை வீரர்களை வாபஸ் பெற இதுவே ஏற்ற தருணம் என்றும், அவ்வாறு வாபஸ் பெறப்படும் வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமெரிக்க கடற்படை கமாண்டண்ட் ஜேம்ஸ் கான்வே தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து அந்த நாட்டிற்கு மேலும் 30 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சமீபத்தில் கூறியிருந்தது.

தற்போது ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரம் கடற்படை வீரர்கள் உட்பட 33 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் உள்ளனர்.

ஈராக்கில் 20 ஆயிரம் கடற்படையினர் உட்பட ஒரு லட்சத்து 42 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!

 

பிரிட்டனில் கடந்த 15 வருடங்களில் முதலாவது தடவையாக பொருளாதார இறங்குமுகம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் பொருளாதாரத்தில் ஒன்றரை வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 27 வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய பொருளாதார சுருக்கம் இது என்று கூறப்படுகிறது.
பூகோள ரீதியில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளின் கூட்டுறவு அவசியம் என்று குரல் எழுப்பியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், அமெரிக்க அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் செயற்படுத்தவிருக்கும் பொருளாதார ஊக்குவிப்பின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.
பிரிட்டனின் இந்த பொருளாதார இறங்குமுகத்துக்கு தான் காரணமல்ல என்று கூறிய அவர், அனைத்துலக மட்டத்தில் வங்கிகளின் அமைப்பில் ஏற்பட்ட சீர்குலைவே இதற்குக் காரணம் என்றார்.

!!!!!!!!!!!!!!!! !

 

எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி வானில் அதிசய காட்சி ஒன்று தென்படும். சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமே அது. இது இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென கூறப்படுகின்றது. தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இந்திய நேரப்படி 10.27 மணிக்கு ஆரம்பமாகும் இந்தச் சூரிய கிரகணம், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே 4.31 மணிக்கு முடிவடையும்.

தமிழகமெங்கும் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதே வேளை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் வானில் தோன்றும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

!!!!!!!!!!!!!!!!!!!!!!

Pakistan Lahore

eilngWk; Pakistan Sri Lanka w;f;F ,ilapyhd 1 ehs; creket Nghl;bapd;jw;Nghja epytuk; Sri Lanka
50over
y; 3tpf;nfl; ,og;gpw;f;F309 xl; ;lq;fis vLj;Js;sJ.

 

1 euro = 147.80 sl /63.64in

1us $ = 113.85sl / 49.02in

1swiss fr = 98.62sl /42.46in

1uk pound =156.90sl / 67.56in

 

Leave a Reply

Your email address will not be published.