உலக நாடுகள் மீது முஷாரப் திடீர் பாய்ச்சல்

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாகிஸ்தானை ஓர வஞ்சனையுடன் நடத்துகிறது என பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.

முஷாரப் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாடுகள் இவ்வாறு நடந்து கொள்வது பாக்., தலைவர்களுக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது . அமெரிக்கா பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து நட‌த்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். ஒபாமா அரசு இத்தாக்குதல் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு முஷாரப் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் வாசிரிஸ்தான் மாகாணத்தில் அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகம் இருப்பதால், அங்கு அவ்வப்போது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது . இது அப்பகுதியில், இந்தாண்டின் முதல் ஏவுகணை தாக்குதல் என கூறப்படுகிறது. மேலும் ஒபாமா அதிபராக பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த தாக்குதலை தொடர்ந்து ஒபாமா முன்னர் கூறியது போலவே பாகிஸ்தான் பொறுத்தவரை விடுத்த எச்சரிக்கைக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகளையே எடுப்பார் என பரவலாக பேசப்படுகிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.