சிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் : சிதம்பரம்

சென்னை : அதிக வேலைவாய்ப்பு அளித்து வரும் இத்த‌கைய சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.


சென்னையில் இன்று சிறு தொழில்முனைவோருக்கு கடனுதவி திட்டத்தின் தொடக்கவிழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது : நாட்டின் முன்னேற்றத்துக்கு சிறு தொழில் முனைவோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது . வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 40 சதவீதம் சிறுதொழில்களின் பங்களிப்புதான். அதிக வேலைவாய்ப்பு அளித்து வரும் இத்த‌கைய சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசாங்கம் சிறுதொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. சிறு தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில், சிறுதொழில் தொடங்குவதற்கான வங்கிக்கடன் உதவி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு சிறுதொழில் வளர்ச்சிக்கு மேலும் அதிக நிதியுதவி அளிக்கும். மேலும் சர்வதேச நிதிச்சுழலால் இந்திய உற்பத்தியில் சிறு தளர்வு ஏற்பட்டுள்ளதே தவிர பின்னடைவு ஏற்பட்டவில்லை என்றும் இதை சரி செய்ய மத்திய அரசும் , ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்றும் சிதம்பரம் கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.