மாரத்தான் போட்டியில் பங்கேற்க வந்த மாணவர் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

மதுரை: மதுரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்க வந்த மாணவர், நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.

மதுரை கூடல்நகர், அஞ்சல் நகர் 30 வது குறுக்குத் தெருவை சேரந்தவர் ரவீந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி திருச்செல்வி. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கார்த்திகா என்ற மகளும், அஸ்வின் ராம்(14) என்ற மகனும் உள்ளனர். இவர் எல்லீஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்து ரத்த சோகை நோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சக மாணவர்களுடன் வந்தார்.

போட்டியில் பங்கேற்று விட்டு 10 மணிக்கு மேல் மாநகராட்சி நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்தார். அஸ்வின் ராமுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source & Thanks : /www.aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.