துபாய் பூகோள‌ கிராம‌த்தில் த‌மிழ‌க‌க் குழ‌ந்தைக‌ளின் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி

துபாய்: துபாய் பூகோள‌ கிராம‌த்தில் இந்திய‌ அர‌ங்கில் தின‌மும் இந்திய‌க் க‌லை, க‌லாச்சார‌த்தைப் பிர‌திப‌லிக்கும் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சிக‌ள் தின‌மும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.

22.01.2009 வியாழ‌ன்று ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ குழ‌ந்தைக‌ள் ந‌ட‌ன‌மாடிய‌து பார்வையாள‌ர்க‌ளை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ அமைந்திருந்த‌து. அர‌பிப் பாட‌லுக்கு த‌மிழ‌க‌க் குழ‌ந்தைக‌ள் ந‌ட‌ன‌மாடிய‌து அர‌பிய‌ரை உற்சாக‌ப்ப‌டுத்தும் வித‌ம‌க‌ இருந்த‌து.

ந‌ட‌ன‌ ஆசிரியை க‌விதாவின் வ‌ழிகாட்டுத‌லில் மூன்று வ‌ய‌துக்குக் குறைந்த‌ குழ‌ந்தைக‌ள் ந‌ட‌ன‌மாடிய‌து பெரும் ஆச்ச‌ரிய‌த்தை ஏற்ப‌டுத்தியிருந்த‌து.

ஆஸ்க‌ர் விருதுக்கு இசைய‌மைப்பாள‌ர் ஏ.ஆர். ர‌ஹ்மான் பெய‌ர் ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்ட‌துக்கு வாழ்த்தும், அவ‌ர் ஆஸ்க‌ர் விருதுக்கு தேர்வு செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ த‌ங்க‌ள‌து அவாவினைத் தெரிவித்த‌ன‌ர்.

Source & Thanks : www.aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.