இலங்கை இன மோதுகை தொடர்பான இரு நூல்கள் பிரித்தானியா மற்றும் பிரான்சில் வெளியீடு

இலங்கையில் நடைபெற்று வரும் “இன மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன” என்பதனை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமும், 2002 – 2006 காலப்பகுதியில் நடைபெற்ற அனைத்துலக சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியிடப்படவுள்ளன.

இலங்கை இன மோதுகையானது தமிழ்-சிங்கள தேசங்களுக்கு இடையேயான போர் மட்டுமல்ல; அனைத்துலக ஈடுபாடும், நோக்கங்களும் கொண்டதொரு அனைத்துலக விவகாரம் என கற்கையாளர்களும் சிந்தனையாளர்களும் விபரித்து இருக்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்த மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமான “இலங்கை இனமோதுகையின் சர்வதேச பரிமாணம்” எனும் நூல் வெளியிடப்படுகின்றது.

குல்ரங் மூத்த பேராசிரியர் சத்தியேந்திரா, கலாநிதி சதானந்தன் உட்பட பல அனைத்துலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பாக இது வெளியாகின்றது.

இதேவேளை – 2002-2006 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை நடைபெற்ற அனைத்துலக சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலாக “மாற்றுநிலைப்படுத்தலின் அரசியல்” எனும் நூல் வெளியிடப்படுகின்றது.

சுதாகரன் நடராஜா, லக்சி விமலராஜா ஆகியோரின் ஆய்வுகளின் தமிழ் தொகுப்பாக இது வெளியாகின்றது.

பிரான்சில் எதிர்வரும் சனிக்கிழமை (31.01.09) பிற்பகல் 4:00 மணிக்கு Salle Jean d’Arc, 52 Place de Torcy, 75018 Paris எனும் இடத்தில் இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

பிரான்ஸ் நிகழ்வு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள (33) 622 111 663 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.09) பிற்பகல் 5:30 நிமிடத்துக்கு SIVAYOGAM, 180-186 Upper Tooting Road, Tooting London, SW17 7EJ எனும் இடத்தில் இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

பிரித்தானியா நிகழ்வு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள (44) 7985 433 782 எனும் செல்லிடப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இரு நிகழ்வுகளிலும்

நடேசன் சத்தியேந்திரா (தமிழ் புத்திஜீவி, தமிழ்நேசன் இணையத்தள முதன்மை ஆசிரியர்)

அ.இ. தாசீசியஸ் (மூத்த புலத்தமிழ் ஊடகவியலாளர் – லண்டன்)

ம.தனபாலசிங்கம் (தமிழ் சிந்தனையாளர், ஆய்வாளர் – அவுஸ்திரேலியா, சிட்னி)

கி.பி. அரவிந்தன் (பல்துறை செயற்பாட்டாளர், எழுத்தாளர் – பாரிஸ்)

ந.ஒ. பற்றிமாகரன் (ஆசிரியர், பத்திரிகையாளர், ஆய்வாளர் – லண்டன்)

ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

Source & Thanks : /puthinam.com

Leave a Reply

Your email address will not be published.