இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“கடந்த 17-ம் தேதி இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் அளித்த பேட்டி திரித்து கூறப்பட்டுள்ளது. நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாகவும் பேசியதைப் போன்று மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்வது கண்டனத்துக்குரியது.

எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் அழிவது தவிர்க்க முடியாதது என்றும், பாதுகாப்பான இடங்களுக்கு அப்பாவித் தமிழர்களை செல்லவிடாமல் அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்துவதால்தான் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தேன்.

சுய நிர்ணய உரிமைக்கான இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை அ.தி.மு.க. முழு மனதோடு ஆதரிக்கிறது. அதே %