கல்லாறு பகுதியில் முன்நகர்வு முறியடிப்பு40 படையினர் பலி – 13 சடலங்கள் மீட்பு

வடபோர் முனையின் கல்லாறு பிரதேசத்தின் ஊடாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது 40க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரின் 13 சடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை வடபோர்முனையான கல்லாறு பகுதியூடாக பெருமளவு படையினர் பெரும் சூட்டாதரவுடன் இந்த முன்நகர்வை ஆரம்பித்ததாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

இதற்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தீவிர எதிர் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 70க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தேடுதலின்போது 13 படையினரின் சடலங்களும் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப்புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.