வந்தாறுமூலையில் கிளைமோர் தாக்குதலில 3 இராணுவத்தினர் பலி! 5 பேர் காயம்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பகுதியில் வீதிப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இராணுவத்தினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 3 இராணுவத்தினர் பலி மேலும் 5இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக தெரி்விக்கப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் வந்தாறுமூலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 5 இராணுவத்தின் கடும் காயங்களுக்கு உள்ளனதாக மட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த சிப்பாய்கள் பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.