பிரபாகரன் நாட்டைவிட்டு வெளியேறவில்லை: கருணா தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் இருந்து இன்னும் வெளியேறவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.

இதேவேளை தாம் தொடர்ந்தும் தமக்கான ஒரு படைப்பிரிவினை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழீழவிடுதலைப்புலிகள் மன்னார் முள்ளிக்குளம், விசுவமடு மற்றும் மணலாறு காட்டுப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் கெரில்லா தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.