ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது: சோனியா காந்தி

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்று இன்று காலை அவர் சோனியாவை சந்தித்து இலங்கையில் நடந்து வரும் கடும் போர் காரணமாக ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சோனியாவிடம் பேசினார். அதற்கு ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்று இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி தங்கபாலுவிடம் தெரிவித்தார்.

இது குறித்து தெரியவருவதாவது:-

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமாரும் சென்றிருந்தார்.

சந்திப்பின்போது இலங்கையில் நடந்து வரும் கடும் போர் காரணமாக ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சோனியாவிடம் தங்கபாலு தெரிவித்தார்.

அதற்கு சோனியா, “ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக மக்கள் விருப்பப்படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

சோனியா மேலும் கூறுகையில், ஈழத்தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாகத்தான் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு சென்று பேச்சு நடத்தி வந்துள்ளார்.

எனவே “ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது” என்றார். இந்த தகவல்களை சோனியாவை சந்தித்து விட்டு வெளியில் வந்ததும் தங்கபாலு நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட போராட்டம் பற்றிய முழு விவரங்களையும் சோனியாகாந்தி கேட்டு அறிந்ததாக தெரிகிறது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.