`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.01.09) செய்திகள்

ஊடகவியலளார்கள் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தெற்கில் ஊடுருவக்கூடிய அபாயம் நிலவுவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடகவியலாளர் அடையாள அட்டைக்கு சமமான போலி அடையாள அட்டையொன்றைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு செல்ல முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் காணப்பட்ட ஊடகவியலளார் அடையாள அட்டை போலியானதென அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஐரின் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இன்று காலை மற்றுமொரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இன்று தாக்கப்பட்டதாக அப்பத்திரிகையின் அலுவலக உத்தியோகத்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை அவரும் அவரது மனைவியும் பயணித்துக் கொண்டிருந்த வேளை, இனந்தெரியாத சிலர் இவர்களது காரைத் தாக்கியுள்ளனர். காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருந்த போதிலும் உபாலி தென்னக்கோன் உயிர் ஆபத்து ஏதுமின்றி தப்பித்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!

ஊவா மாகாணம், பண்டாரவளை பூனாகலை தோட்டத்தில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

27 வயதான செல்லையா நடராஜ் என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார். 2003 ஆம் ஆண்டுக்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பணிபுரிந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, திருகோணமலை கிண்ணியா சின்னத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தமிழர் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

தம்மை அடையாளப்படுத்தத் தவறியமை காரணமாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டு சீனன்குடா பொலிஸில் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இரவு 8.50 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத் தாக்குதலில்3 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 5 படைச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த படையினர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் குறித்து மட்டு. மாவட்ட விடுதலைப்புலிகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இத்தாக்குதலில் 5 படைச் சிப்பாய்கள் மட்டும் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர வீதிக் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீதே புலிகளினால் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!
சுமார் ஒரு வார காலத்தின் பின்னர் வன்னிப்பிரதேசத்திற்கு 3 லொறிகளில் வியாழனன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சுமார் 100 லொறிகளில் உலக உணவுத் திட்டம் உட்பட மற்றும் அரச அதிகாரிகளின் வாகனத்தொடரணியில் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் கடும் சண்டைகள் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையின் பின்னர் வன்னிப்பகுதிக்கான வீதி திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்கள் தடைபட்டிருந்தன.

இதனால் வன்னிப்பிரதேசத்திற்குச் சென்றிருந்த லொறிகள் உணவுப் பொருட்களை இறக்கிவிட்டு வவுனியாவிற்குத் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என்றும், நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்கான போக்குவரத்து நடைபெற்ற போதிலும் லொறிகள் இல்லாத காரணத்தினால் 3 லொறிகளில் மாத்திரமே உணவுப் பொருட்களை அனுப்பக் கூடியதாக இருந்தது என்றும் வவுனியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 11 சடலங்களும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரால் வன்னிப்பகுதிக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அண்மைய வாரங்களாக விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையே சீரான போக்குவரத்து இடம்பெறாததனாலும், அடிக்கடி போக்குவரத்துக்கள் தடைபட்டிருந்ததனாலும், வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 80 சடலங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா பூந்தோட்டம் பகுதியில் விசேடமான ஒரிடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சடலங்களை விடுதலைப்புலிகள் உரிமை கோரி, அவற்றை தம்மிடம் ஒப்படைப்பதற்குரிய வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரிடம் விடுதலைப் புலிகள் கோரியிருந்தார்கள் என்றும், இருந்த போதிலும், வன்னிக்கான வீதி மூடப்பட்டிருந்ததுடன், அந்த நிலையிலும் இந்தச் சடலங்களை வன்னிப்பகுதக்குக் கொண்டு செல்வதற்கு தமது பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை மோதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருமே உறுதிப்படுத்த தவறியதனால், அந்தச் சடலங்களை வன்னிப்பகுதிக்குத் தம்மால் கொண்டு செல்ல முடியாமல் போனது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறை சடலங்களினால் நிறைந்திருந்ததுடன், மேலும் மேலும் கொண்டு வரப்படுகின்ற சடலங்களை குளிர் நிலையில் பாதுகாப்பாக வைப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டிருந்தது என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலைப் புலிகளின் 80 சடலங்களும் இரண்டு தடவைகளில் அரச செலவில் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஏற்பாட்டில் அவர்களது முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டன.

பொங்கல் தினமாகிய கடந்த 14 ஆம் திகதி 42 சடலங்களும், கடந்த 20 ஆம் திகதி 38 சடலங்களும் இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவைக்குழு பிரதிநிதிகளின் முன்னிலையில் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் விசேடமாக அடையாளமிடப்பட்டுள்ள ஓரிடத்தில் பொலிஸார் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களினால் அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!
 
இலங்கையில் உடனடியாக மனிதாபிமான ரீதியில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வதியும் மூன்று இலட்சம் மக்களுக்கு உதவிப் பணிகள் சென்றடைய ஆவண செய்யவேண்டும் என்று ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங் வோல்ட்ரர் ஸ்ரெயின்மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பிராந்தியத்தில் உள்ள மூன்று இலட்சம் பொதுமக்களுக்கும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உதவிகள் சென்றடையாத நிலையையிட்டு தான் கவனம் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் மிக முக்கியமாக இப்போது நாம் செய்ய வேண்டியது போர்நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையும் மருத்துவ மற்றும் உதவிப்பொருட்கள் போர் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுதலுக்கான ஏற்பாடுமேயாகும் என்றும் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!
 
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை படையினரின் யுத்தம் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது என்று ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா நேற்றுக் கூறினார்.
பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டபின்னர் கிழக்கைப் போல் வடக்கிலும் மாகாணசபை அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:-
நாம் தொடர்ச்சியாகப் புலிகளுக்கு விடுத்துவரும் வேண்டுகோள், அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்பதுதான்.
ஆயுதங்கள் கீழே வைக்கப்படும்வரை எமது யுத்தம் தொடரும். எக்காரணம் கொண்டும் அது நிறுத்தப்பட மாட்டாது.
யுத்தம் எப்போது நிறுத்தப்படும் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. அது படையினருக்குத்தான் தெரியும்.
புலிகளின் பயங்கரவாதம் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டதன் பின்பு கிழக்கைப் போல் வடக்கிலும் மாகாணசபை அமைக்கப்படும். வடக்கு மக்கள் புலிகளின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கப்படும்.
தற்போது இது தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆராய்ந்து வருகின்றது. இதில் கலந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அழுத்தத்தின் கீழிருந்து செயற்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்து கொண்டு இடைநடுவில் எழும்பிச் சென்றுவிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ தெரியாது.
சர்வகட்சிப் பிரதிநிதிகளின் தீர்வு யோசனை கிடைக்கும்வரை தற்போதுள்ள நிர்வாக முறையே வடக்கிலும் இருக்கும். – என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர்.
பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார்.
கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் தெரிவித்ததுடன், அச்சம் காரணமாக மக்கள் வவுனியாவுக்கு வராதுள்ளனரென தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் வவுனியா விகாரையொன்றில் இராணுவத்தினரால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுவந்த நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பலாலி இராணுவக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புடைவை வியாபாரி போன்று வந்து, குறித்த நபர் கப்பம் வசூலித்து வந்ததாகவும் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த இவர் யாழ். நகரிலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், கைதானவர் இராணுவத்தினரின் பெயரைப் பயன்படுத்தியே கப்பம் பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மனித உரிமைகள் சரத்துக்கு முரணாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செய்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு கேட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது முறைப்பாட்டாளரான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சார்பில் சட்டத்தரணி சந்திரபால குமாரகே ஆஜராகவிருப்பதாகவும் மேலும் சில சட்டத்தரணிகள் தன்னிச்சையாக ஆஜராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய விசாரணையை அவதானிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் சமயத் தலைவர்கள் பலரும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு இந்தியா ஆதரவு கொடுக்கக் கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளது.
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இலங்கையில் தமிழர்கள் நடத்தி வரும் சுதந்திரப் போராட்டத்தை, மகாத்மா காந்தியடிகளின் வழியில் இந்திய அரசு அணுக வேண்டும் ஆதரிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலைக்கு இந்தியா துணை போகக் கூடாது என்றும் வலியுறுத்தப்படவுள்ளது.
அமெரிக்கா முழுவதிலும் வசிக்கும் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் இதில் பங்கேற்கவுள்ளனர். பேரணியில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் மகாத்மாகாந்தியடிகள் போல உடை தரித்து காலித் தட்டுடன் உண்ணாவிரதமும் மேற்கொள்ளவுள்ளனர்.
!!!!!!!!!!!
வீதிப்போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து 1,500 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
றம்பொடகல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான இவர் அந்த நபரின் வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்ற பின்னர் திருப்பித் தருவதற்கு 1500 ரூபாவைக் கேட்டுள்ளார்.
1500 ரூபாவை தராவிட்டால் வழக்குத் தொடரப்போவதாகவும் கூறியுள்ளதையடுத்து அந்த நபர் இலஞ்ச விசாரணை ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு முறையிட்டார்.
இதனையடுத்து திங்கட்கிழமை அவர் பணத்தைப் பெறும்போது ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் றம்பொடகல்ல நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
இலங்கை கடல்பரப்பில் எண்ணெய் அகழ்வு வேலைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய அரசின் உதவியுடன் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் இது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் அகழ்வு வேலைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் வீ.ஆர்.எஸ்.சர்மா மற்றும் இந்திய எண்ணெய் அமைச்சர் முரளி டீ.யூராவையும் பெற்றோலிய வள அமைச்சர் .எச்.எம்.பௌசி சந்தித்து பேசிய போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மன்னார் வளைகுடாப் பகுதியின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொள்வதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே பகிரங்க கேள்விப் பத்திரம் கோரல் மூலம் இந்திய கெயரன் நிறுவனம் ஒரு எண்ணெய் வளப்பகுதியை அகழ்வுக்காக பெற்றுள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களையும் கெயரன் நிறுவனம் தயார் செய்துள்ளது.
!!!!!!!!!!!!
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பெயரையும் கட்சியின் பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருவதாக அரச தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை வாய் மூல விடைக்கான வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறியதாவது;
எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக 15 தேர்தல்களில் தோல்வி கண்டவர். அவரது கட்சியான .தே.. அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதும் சாதனையாகிறது.
இதனடிப்படையிலேயே ரணில் தனது பெயரையும் கட்சியின் பெயரையும் “”கின்னஸ்புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகின்றார். விரைவில் அவரது ஆசை நிறைவேறட்டும். அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த .தே..வினர் அதனை விவாதத்திற்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசைப் பற்றி குறை கூறவோ குற்றம் சாட்டவோ எதுவும் இல்லாததாலேயே அவர்களால் அதனை விவாதத்திற்கு எடுக்க முடியவில்லை.
இதனால்தான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதும் வாபஸ் பெறுவதுமாக .தே..தடுமாறிக் கொண்டிருக்கிறது.
!!!!!!!!!!!!!!
நாவலப்பிட்டி பஸ் நிலையத்திற்கருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை வெடிபொருட்கள் கொண்ட இரு பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி நகரில் பிரபல அமைச்சர்கள் கலந்துகொள்ளும் வைபவங்கள் இடம்பெறவிருந்த நிலையிலேயே இவ் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!
india
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி இன்று தாக்கல் செய்தார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதும் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதி அவையில் தாக்கல் செய்து விவாதத்தை தொடங்கி வைத்தார். இதன்மீது பேரவையில் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இலங்கை பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் போக்கைக் கண்டிப்பதாகக் கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
!!!!!!!!!!!!!!!!
கட‌ந்தசில வார‌ங்களு‌க்கு மு‌ன்பு கட‌லி‌ல்மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றபோது மாயமான நாகைமீனவ‌ர்க‌ள் 4 பே‌ரி‌ன் சடல‌ம் கரை ஒது‌‌ங்‌கியது. இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர்தீ‌விரவிசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

நாகபட்டினத்தில் இருந்து கடந்த 12ஆ‌ம் தேதி கன்னியப்பன், நாச்சியப்பன், சித்ரவேல், சண்முகராஜ் ஆகிய மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து மூழ்கியதாக மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.
!!!!!!!!
இல‌ங்கை‌யி‌ல் போரைநிறு‌த்‌தி அமை‌தி‌ப் பே‌ச்சு நட‌த்து‌வத‌ற்கான முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ள்ள ம‌த்‌திய அர‌சி‌ற்குமீ‌ண்டு‌ம் ஒரு கால‌க்கெடுவை முத‌ல்வ‌ர்நி‌ர்ண‌யி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பா... ‌தீ‌ர்மான‌ம்நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

பா‌ட்டா‌ளி ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் செய‌ற்குழு‌க் கூ‌ட்ட‌ம், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன்நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் மு‌ன்‌னிலை‌யி‌ல், தலைவ‌ர் கோ.கா. ம‌ணி தலைமை‌யி‌ல், ‌தி‌ண்டிவன‌ம் அரு‌கி‌ல் உ‌ள்ள தைலாபுர‌த்‌தி‌ல் நட‌ந்தது.

அ‌தி‌ல், இலங்கையில் போரை நிறுத்தி அமைதி பேச்சு நட‌த்து‌ம் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள மீண்டும் ஒரு காலக்கெடுவை முதலமைச்சர் கருணாநிதி நிர்ணயிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இ‌ந்த‌ச் செய‌ற்குழு‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் க‌ட்‌‌சி‌யி‌ன் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், பா... ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர்க‌ள், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆ‌கியோ‌ர் கலந்து கொண்டனர்.

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்பிர‌ச்சனை, அர‌சிய‌ல்நிலவர‌ம், சென்னையில்பி‌ப்ரவ‌ரி 21ஆ‌ம் தே‌தி நடைபெற இருக்கும் பாட்டாளி இளைஞ‌ர் அணியின் மாநில மாநாடு ம‌ற்று‌‌ம் அதற்கான ஏற்பாடுகள் ஆ‌கியவை கு‌றி‌த்து இ‌‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல்விவா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டன.
!!!!!!!!!!
கட‌ற்கரைக‌ள், வன‌ங்க‌ள், ஆறுக‌ள் ம‌ற்று‌ம் இதரநீ‌ராதார‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட இய‌ற்கை வள‌ங்க‌ள் ம‌க்க‌ள் தடை‌யி‌ன்‌றி‌யு‌ம் தொட‌ர்‌ச்‌சியாகவு‌ம் பய‌ன்படு‌த்துவத‌ற்கானவை எ‌ன்று‌ம், ம‌க்க‌ளி‌ன் இய‌ற்கையான உ‌ரிமைகளை அரசா‌ல் கூட‌‌ப் ப‌றி‌க்க முடியாது எ‌ன்று‌ம் உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம் கூ‌றியு‌ள்ளது.

கோவா‌வி‌ல் கட‌ற்கரை‌க்கு‌ச் செ‌ல்ல பொது ம‌க்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் சாலை, வாகன‌ம்நிறு‌த்து‌மிட‌ம் ஆ‌கியவ‌ற்றை ஆ‌க்‌கிர‌மி‌த்து, ஃபொமெ‌ன்டோரிசா‌ர்‌ட் ம‌ற்று‌ம் ஹோ‌ட்ட‌ல் எ‌ன்றநிறுவன‌ம் தனது க‌ட்டட‌ங்களைவி‌ரிவுபடு‌த்‌தியது தொட‌ர்பானவிரைவு வழ‌க்கு உ‌ச்சநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்றுவிசாரணை‌க்கு வ‌ந்தது.

இ‌வ்வழ‌க்கைவிசா‌ரி‌த்தநீ‌திப‌திக‌ள்பி.எ‌ன். அக‌ர்வா‌ல், ‌ஜி.எ‌ஸ். ‌சி‌ங்‌வி ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட அம‌ர்வு, அர‌சை ஏமா‌ற்‌றி பொதும‌க்க‌‌ள் பய‌ன்படு‌த்து‌ம் பகு‌திகளை ஆ‌க்‌கிர‌மி‌த்து‌க் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள உணவுவிடு‌தி‌யி‌ன் க‌ட்டட‌ங்களை இடி‌‌‌க்கு‌ம்படி உ‌த்தர‌வி‌ட்டதுட‌ன்,”இய‌ற்கை வள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்து‌ம் உ‌ரிமைக‌ள்மீற‌ப்படுவதை எ‌தி‌ர்‌த்துநீ‌திம‌ன்ற‌ங்களை ம‌‌க்க‌ள் அணுக முடியு‌ம்எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

“‌நீ‌ராதார‌ங்க‌ள், வன‌ங்க‌ள், ஆறுக‌ள், கட‌‌ற்கரைக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட இய‌ற்கை வள‌ங்களை‌ ம‌க்க‌ளி‌ன் சா‌ர்‌பி‌ல் அரசுதா‌ன் அற‌க்க‌ட்டளைதாரராகநி‌ன்று பாதுகா‌‌க்க வே‌ண்டு‌ம். கு‌றி‌ப்பாக எ‌தி‌ர்கால‌ச் ச‌ந்த‌தி‌யினரு‌க்காக இதை‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம். பொது‌ச் சொ‌த்து‌க்களை உருவா‌க்‌கி அவ‌ற்றை ம‌க்க‌ள் தடை‌யி‌ன்‌றி‌ப் பய‌ன்படு‌த்த அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம்.

பொது ம‌க்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கை‌க்கு‌ரிய சொ‌த்து‌க்களை த‌னியா‌ர் சொ‌த்து‌க்களாக அரசா‌ல்கூட மா‌ற்ற முடியாது. அ‌ப்படி ம‌க்க‌‌ளி‌ன் உ‌ரிமைக‌ளி‌ல் தலை‌யீடுக‌ள் இரு‌ப்பதாக‌த் தெ‌ரி‌ந்தா‌ல், கா‌ற்று, ஒ‌ளி, ‌நீ‌‌ர் ஆ‌கியவ‌ற்றை பய‌ன்படு‌த்துவத‌ற்கு உ‌ள்ள ம‌க்க‌ளி‌ன் உ‌ரிமைகளை‌ப் பாதுகா‌ப்பத‌ற்காகவு‌ம், இய‌ற்கை வள‌ங்களை‌ப் பாதுகா‌‌ப்பத‌ற்காகவு‌ம்நீ‌திம‌ன்ற‌ம் நேரடியாக‌த் தகு‌ந்த நடவடி‌க்கை எடு‌க்க முடியு‌ம்எ‌ன்று‌ம்நீ‌திப‌திக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.
!!!!!!!!!!
த‌ற்போதைய 14ஆவது நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌‌ன் 15ஆவது கூ‌ட்ட‌த்தொட‌ர் அடு‌த்த மாத‌ம் (‌பி‌ப்ரவ‌ரி) 12ஆ‌ம் தே‌தி துவ‌ங்கு‌கிறது.

முதல் நாளான 12ஆ‌ம் தேதியன்று, நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் மைய அரங்கத்தில் நட‌க்கு‌ம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத் தொடரானது, தற்போதைய 14ஆவது நாடாளுமன்றத்தின் 15ஆவது கூட்டத் தொடர் ஆகும். இந்த கூட்டத் தொடர் 26ஆ‌ம் தேதி வரை இரண்டு வார காலம் நீடிக்கும். இது தொடர்பாக, மக்களவை‌ச் செயலகம், மா‌நில‌ங்களவை‌ச் செயலகம் ஆகியவற்றில் இருந்து த‌னி‌த்த‌னி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற‌த் தேர்தல் நட‌க்க‌விருப்பதால், இதுவே 14ஆவது நாடாளுமன்றத்தின் கடைசி‌க் கூட்டத் தொடராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!
மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ல் தனது குடிம‌க்க‌ள் 3 பேரை இழ‌ந்து‌ள்ள ஜெ‌ர்ம‌னி, இ‌ந்த‌த் தா‌க்குத‌லி‌‌‌ற்கு ல‌ஸ்க‌ர் த‌யீபாதா‌ன் பொறு‌ப்பு எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

மு‌ம்பை‌த் தா‌க்குத‌ல்க‌ள் தொட‌ர்பான தகவ‌ல்களை‌ ப‌றிமா‌றி‌க்கொ‌ள்வத‌ற்காக இ‌ந்‌தியா வ‌ந்து‌ள்ள ஜெ‌ர்ம‌னி‌யி‌ன் ஃபெடர‌ல் காவ‌ல்துறை‌த் தலைவ‌ர் ஜா‌ர்‌ஜ்ஜியெ‌ர்‌க், டெ‌ல்‌லி‌யி‌ல் தே‌ச‌ப் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே. நாராயண‌ன், உ‌ள்துறை‌ச் செயல‌ர் மது‌க்க‌ர் கு‌ப்தா, புலனா‌ய்வு‌த் துறை‌த் தலைவ‌ர் ராஜ‌ீ‌வ், ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக‌ இய‌க்குந‌ர் அ‌ஸ்வ‌னி குமா‌ர், போதை‌ப் பொரு‌ள் தடு‌ப்பு‌த்துறை உய‌ர் அ‌திகா‌ரிக‌ள் ஆ‌கியோரை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர்.

‌பி‌ன்ன‌ர் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்தஜியெ‌ர்‌க், “இதுவரை நா‌ங்க‌‌ள் நட‌த்‌தியு‌ள்ள புலனா‌ய்வுக‌ளி‌ன்படி இ‌ந்த‌த் தா‌க்குத‌ல்களு‌க்கு ல‌ஸ்க‌ர் த‌யீபா இய‌‌க்கம்தா‌ன் பொறு‌ப்பு எ‌ன்று நா‌ங்க‌ள் கருது‌கிறோ‌ம். ஆனா‌ல் அ‌ந்த இய‌க்க‌த்‌தி‌ற்கு நேரடி‌‌த் தொட‌ர்பு இரு‌க்‌கிறதா எ‌ன்று எங்களு‌க்கு‌த் தெ‌ரியாது. அ‌ல்கா‌ய்டாவுட‌ன் தொட‌ர்பு‌டைய ம‌ற்ற இய‌க்க‌ங்களு‌க்கு இ‌தி‌ல் தொட‌ர்‌பிரு‌க்கலா‌ம் எ‌ன்ற க‌ணி‌ப்பையு‌ம் மறு‌ப்பத‌ற்‌கி‌ல்லைஎ‌ன்றா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!
‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானின் பெயர் 3 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மும்பை குடிசைப் பகுதியை சேர்ந்த ஓர் இளைஞன் கோடீஸ்வரன் ஆவது பற்றிய கதை இது.
லண்டனை சேர்ந்த டேனியல் போய்லே இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அனில் கபூர், தேவ் படேல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்துக்கு இசையமைத்ததற்காக, சமீபத்தில் ‘கோல்டன் குளாப்’ விருது ரகுமானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியான உயரிய விருதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்கர் விருதையே பெரும் வாய்ப்பும் ரகுமானுக்கு கிடைத்துள்ளது. அதாவது, திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசையமைத்ததற்காக 3 பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்தப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர் உள்பட மொத்தம் 10 விருதுகளுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிரபல ஆங்கில நடிகர் பிராட்பிட் நடித்த படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அடுத்தமாதம் 22ம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் உள்ள கோடக் நகரில் நடைபெறும் விழாவில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியாவை சேர்ந்த ஒருவர் (ஏ.ஆர். ரகுமான்), 3 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!
இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக கருத்து கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு மு‌ன்வர வேண்டும் எ‌ன்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை தமிழர்கள் குறித்து நான் அளித்த பேட்டியை சிலர் திரித்து கூறிவிட்டனர். இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும், ராணுவத்துக்கு ஆதரவாகவும் நான் பேசியதுபோன்ற ஓர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

சுய நிர்ணய உரிமைக்கென்று இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அதிமுக முழு மனதோடு ஆதரிக்கிறது. அதே சமயத்தில் ஆயுதம் ஏந்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை எதிர்க்கிறது. ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தடையாக இருக்கிறார்.

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர்த்து, இலங்கைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் சுதந்திரமாக சிங்கள இன மக்களுக்கு சமமாக வாழ நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு.

இதற்கு உதவும் வகையில் இல‌‌ங்கை‌யி‌ல் உடனடியாக போரைநிறு‌த்‌த மத்திய அரசு முன்வர வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!
world
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் சர்வதேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்வதாக அமெரிக்காவின் புதிய அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான சிறப்பு அமெரிக்க பிரதிநிதியாக ரிச்சர்ட் ஹோல்பர்க்கை ஒபாமா நியமித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சிக்கு பின்னர், ஒபாமா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீதுதான் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த இரு நாடுகளிலும் இருந்து செயல்பட்டு வரும் அல்காய்தா மற்றும் தாலிபான் பயங்கரவாத பயிற்சி முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும். அதோடு, ஆப்கானில் செயல்பட்டு வரும்ஓபியம்போதை மருந்து கடத்தல் வர்த்தகத்தையும் முடக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் தொடரும் வன்முறைகள் மற்றும் ஊடுருவல்கள் போன்றவற்றையும் வேரோடு அழிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாத வரை, சர்வதேச அளவில் பாதுகாப்பு மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியாது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால், ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அமெரிக்க மக்களும், சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவற்றை கருத்தில் கொண்டு, இந்த இரு நாடுகளுக்கான அமெரிக்க கொள்கைகளில் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

!!!!!!!!!!!!!!!

ஐநா சபைக்கான அமெரிக்க தூதராக சூசன் ரைஸ் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. .

முன்னாள் அமெரிக்க கிளிண்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறையில் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான துணை அமைச்சராக இருந்தவர் சூசன் ரைஸ்.

இவரை ஐநாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பதவியில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

போக்குவரத்து அமைச்சராக ரே லாகுத், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக ஷான் டோனோவன் ஆகியோரது நியமனத்திற்கும் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்துவதில் பாகிஸ்தானின் பிரதிநிதியாக சீனா செயல்படும் என பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

சீனத் தூதரக குழுவினருக்கு இஸ்லாமாபாத்தில் நேற்W Kd;dpuTஅளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் குரேஷி, ஹீ யாஃபி தலைமையிலான சீனாவின் சிறப்புத் தூதர் குழுவை இந்தியா சென்று தங்கள் சார்பில் பேச்சு நடத்துமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

இந்தியாவிடம் சீன தூதரகக் குழு தெரிவிக்கும் அனைத்து விடயங்களும், பேச்சுகளும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவே கருதப்படும் என்றும் சீனாவிடம் தாம் கூறியதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான்சீனா ஆகிய இருநாடுகளும் இருதரப்பு, மண்டல, சர்வதேச விவகாரங்களில் பூரண நம்பிக்கையுடன், பரஸ்பர புரிதலுடன் இருப்பதாகவும் குரேஷி அப்போது கூறினார்
!!!!!!!!!!
சீனாவில் கடந்த ஆண்டில் 6 குழந்தைகளின் உயிரைப் பலிகொண்டதுடன், 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளை நோய் வாய்ப்படுத்திய இரசாயன மாசடைந்த பாலுணவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
இவர்களில் ஒருவர் மிகவும் இழக்கமான 600 தொன் பாலை வாங்கி அதில் புரதச்சத்து குறைவு என்பது தெரியாமல் இருப்பதற்காக, மெலமைன் இரசாயனத்தை கலந்து விற்றவராவார்.
இந்தப் பாலை விற்ற சன்லூ நிறுவனத்தின் நிர்வாக சபைத் தலைவிக்கு ஆயுட்தண்டனை வழங்கப்பட்டது.
இந்த அசம்பாவிதங்களுக்கு சீன அரசாங்க அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குரல் எழுப்புகின்றன.
!!!!!!!!!!
காசாவில் மூன்று வாரம் தொடர்ந்த இஸ்ரேலிய தாக்குதல்களை அடுத்து, அங்கு ஹமாஸ் அமைப்புடன் நீடித்திருக்கக்கூடிய மோதல் நிறுத்தம் ஒன்றை பேணும் நோக்கில், எகிப்திய மத்தியஸ்தர்களுடன், இஸ்ரேலிய தூதுவர் அமோஸ் ஹிலாட் கெய்ரோவில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துகிறார்.
காசாவின் எல்லைகளின் ஊடாக ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுப்பது என்ற உத்தரவாதத்தை எகிப்திடம் பெற இஸ்ரேல் முனைகிறது.
ஹமாஸ் அதிகாரிகளும் விரைவில் கெய்ரோ வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவில் மனித நேய நிலைமைகள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளதாக அதற்கான . நா தூதுவர் ஜோண் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.