தமிழ்நாடு அரசின் பரிசு பெறும் ஈழத்தமிழரின் நூல்

posted in: தமிழ்நாடு | 0

ஆண்டுதோறும் தமிழில் சிறந்த நூல்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் பரிசில்கள் வழங்கி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான பரிசில் பெறும் நூல் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈழத் தமிழர் எழுதிய நூலும் பரிசில் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டுக்கான மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் பிரிவுகளுக்கான பரிசு கனடா வாழ் ஈழத்தமிழரான சுப்ரமணியம் இராசரத்தினத்தின் “பண்பாடு: வேரும் விழுதும்” என்ற நூலுக்கு கிடைத்துள்ளது.

அந்த நூல் பண்பாடு என்பதனை ஒரு கலைக்களஞ்சிய விளக்கத்துடன் 12 அத்தியாயங்களில் எளிமையாக நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பது அதன் சிறப்பம்சமாகும்.

சமூக ஆர்வலரும், தமிழ்த்தேசிய பற்றாளருமான இவருக்கு கிடைத்த இப்பரிசு புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே இவர் “தமிழீழம்: நாடும் அரசும்” என்ற வரலாற்று நூலையும் எழுதி வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : /puthinam.com

Leave a Reply

Your email address will not be published.