குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சீருடையணிந்து நீதிமன்றில் ஆஜராக முடியாது: நீதவான்

குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சீருடையணிந்து நீதிமன்றில் ஆஜராக முடியாதென கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதவான் நிசாந்த ஹப்புராச்சி தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக முறைப்பாடு செய்த பெண் ஒருவரை கடுமையான தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது குறித்த பொலிஸார் சீருடையணிந்து நீதிமன்றில் ஆஜராகக் கூடாதென நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாதெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : www.tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.