ஜன. 26ம் தேதி பகுதி சூரிய கிரகணம்

சென்னை: வருகிற திங்கள்கிழமையன்று பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சென்னையில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.05 மணி வரை இதை பார்க்கலாம்.

இந்த சூரிய கிரகணம் திருவோணம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் திருவோணம், உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், திரிகோணத்தில் அமைந்த ரோகிணி மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் விநாயகருக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் காலை 10.26 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிகிறது. சென்னையில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.05 மணி வரை காண முடியும்.
.
தை அமாவாசை 25-ந் தேதி முற்பகல் 11.18 மணிக்கு தொடங்கி 26-ந் தேதி பிற்பகல் 1.34 மணிக்கு முடிகிறது. எனவே 25-ந் தேதி அமாவாசை தர்ப்பணமும், 26ந் தேதி கிரகண தர்ப்பணமும் செய்யலாம்.

இந்த சூரிய கிரகணம் தென்னிந்தியாவின் சில பகுதிகள், கிழக்கு கடற்கரைப் பகுதி, வட கிழக்கு, அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகளில் தெரியும்.

உலக அளவில், தென் ஆப்பிரிக்கா, வட மேற்கு அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் நன்கு தெரியும்.

நமீயா அருகே தெற்கு அட்லான்டிக் கடல் பகுதியில் சூரிய கிரகணம் தொடங்கி, கம்போடியாவின் தெற்குப் பகுதியில் முடிவடையும்.

அடுத்த சூரியகிரகணம் ஜூலை 22ம் தேதி நடைபெறுகிறது. அது முழுமையாக இருக்கும். இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரியகிரகணமாகவும் அது அமையும்.
Tags: tn, india, solar eclipse, தமிழ்நாடு, இந்தியா, சூரிய கிரகணம்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.