வெள்ளை மாளிகையில் துவங்கியது பராக் ஒபாமாவின் சகாப்தம்*பதவியேற்ற நாளை தேசிய நல்லிணக்க தினமாக அறிவித்தார்

வாஷிங்டன் : கடந்த 18ம் நூற்றாண்டில், கருப் பின அடிமைகளால் கட்டப் பட்ட வெள்ளை மாளிகையில், அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபரான பராக் ஒபாமாவின் சகாப்தம் துவங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் வெள்ளை மாளிகையில் ஆதிக்கம் செலுத்த உள்ளார். இதன்மூலம் தானும், தன் மனைவி மிச்சேலும், மகள்களும் வெள்ளை மாளிகையில் வசிக்க வேண்டும் என்ற ஒபாமாவின் கனவு நிறைவேறி உள்ளது.

தங்கள் வாழ்நாளில், கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராக மாட்டாரா, வெள்ளை மாளிகையில் குடியேற மாட்டாரா என, பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருந்த, அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களின் ஆசையும் நிறைவேறியுள்ளது. அமெரிக்கா முழுவதிலும் இருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்னிலையில், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளில் கைவைத்தபடி, அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா பதவியேற்றபோது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஏராளமானவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். குறிப்பாக, கருப் பினத்தவர்கள் ஒவ்வொருவரும் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர். அதிபராகப் பதவியேற்றுக் கொண் டதும், காங்கிரஸ் சபையின் சார்பில் அளிக்கப்பட்ட பாரம்பரிய விருந்தில் ஒபாமா பங்கேற்றார். அங்கும், முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளே இடம் பெற்றிருந்தன.

அப்போது பேசிய ஒபாமா, “எம்.பி.,க்கள் அனைவரும் அமெரிக்காவின் மேம்பாட்டிற்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்’ என, கேட்டுக் கொண்டார். பின், வெள்ளை மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் தங்கியிருந்த ஒபாமாவும், அவரின் மனைவி மிச்சேலும், அதிபரின் பதவியேற்பு விழாவை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பை பல மணி நேரங்களாக பார்வையிட்டனர். ஒபாமாவுடன் அவரின் மகள்களும், துணை அதிபர் ஜோ பிடென் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

குறுகிய காலத்தில் அமெரிக்க மக்களின் மனதில் இடம் பிடித்த பராக் ஒபாமா, அணிவகுப்பு சென்ற போது அதைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் இருந்தார்; அவர்களைப் பார்த்து கையசைத்த வண்ணம் இருந்தார். அதைத் தொடர்ந்து, பதவியேற்பை ஒட்டி நடந்த அதிகார பூர்வமான சில நிகழ்ச்சிகளில் பங் கேற்றார். அவற்றில் நடனமும் ஆடினார்.அதிபராகப் பொறுப்பேற்றதும், தான் பதவியேற்ற நாளான ஜனவரி 20, 2009ஐ, “தேசிய மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க தினமாக’ அறிவித்தார். அதற்கான பிரகடனத்திலும் முதன்முதலாக கையெழுத்திட்டார். அதுவும் இடது கையால் கையெழுத்திட்டார்.அதிபர் ஒருவர் இடதுகையால் கையெழுத்திட்டதை, தொலைக் காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பியதால், அமெரிக்கர்கள் எல்லாம் அவற்றைப் பார்த்து வியந்தனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.