காசாவில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

காசாவில் மூன்று வாரகாலமாக நடத்திய தாக்குதல்களை அடுத்து தற்போது அங்கிருந்து முழுமையாக தாம் வெளியேறி விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

ஏற்படக்கூடிய நிலைமைகளை சமாளிப்பதற்காக தமது படையினர் பாலத்தீன பிராந்தியங்களை சுற்றிவளைத்திருப்பார்கள் என்று இஸ்ரேலிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் மீது இஸ்ரேலிய உளவு விமானங்கள் பறந்தவண்ணம் உள்ளன.

இஸ்ரேலிய கடற்படைக் கலங்கள் கரையை நோக்கி சுட்டுக்கொண்டிருக்கின்றன. அது வேறுவிதமான பாதுகாப்பு நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறுகிறது.

காசாவில் தமது கட்டுப்பாட்டை மீள உறுதிப்படுத்திவருகின்ற ஹமாஸ் அமைப்பு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா அவர்கள், தனக்கு முன்னதாக அமெரிக்காவின் அதிபர்களாக இருந்தவர்கள் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

களத்தில் அவர் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதில் இருந்தே அவரை தாம் மதிப்பிடுவோம் என்று ஹமாஸ் கூறியுள்ளது.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.