ஆளுநர் உரையில் ஏழைகளுக்கான எந்தத் திட்டமும் இல்லை:ஜெயலலிதா

ஆளுநர் உரையில் உரையில் ஏழை,எளியவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்த திமுக அரசு ஆளுநர் உரையில்,”திருமங்கலம் வெற்றியின் மூலம் ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டுள்ளது”என்று கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பயங்கரவாதச் செயல்கள் நடக்காமல் அரசு கண்காணிப்பதாக அறிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

பக்கத்து மாநிலங்களில் இருந்து தண்ணீரைப் பெறுவது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் கூறப்படவில்லை.

கரும்புக்கு டன்னுக்கு ரூ.2-ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்திருக்கிற நேரத்தில் டன்னுக்கு ரூ.1,100-வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்று வேலை.

தொழில்துறையை பொறுத்தவரை முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டுள்ளது.மின்வெட்டு காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்துள்ளது.

ஆளுநர் உரையில் ஏழை,எளியவர்களுக்கு நன்மையளிக்கும் எந்தத் திட்டமும் இல்லை.கடந்த மூன்றாண்டு ஆளுநர் உரைகளின் கலவையாக இந்த உரை உள்ளது.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source &Thanks : newindianews.com

Leave a Reply

Your email address will not be published.