இலங்கை விமானப்படை வைற்றர் ஜெற் ரக விமானம் வன்னி போர்முனையில் காணாமல் போயுள்ளது (22.01.2009) செய்திகள்.

இலங்கை விமானப்படையினரின் மிக் வைற்றர் ஜெட் ரக போர் விமானம் ஒன்று இன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறப்பில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி வான்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இந்த தகவலுக்கு வன்னியில் உள்ள வன்னிபடைத் தலைமையகத்தை கோடிட்டுள்ளனர்.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை

சம்பவம் இடம்பெற்ற வேளையில் மூன்று விமானப்படையினர் விமானத்தில் இருந்துள்ளனர்.

ரஸ்ய தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் குரொக்கடைல் நோஸ் என்ற லேசர் கருவியையும் கொண்டுள்ளது.

அத்துடன் ரொக்கட், ஏவுகணைகள் மற்றும் பல்வகைப்பட்ட பெருந்தொகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடியது.

அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீதும், விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீதும் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுவீச்சுகளும் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.