சிங்களவர்-தமிழர்களுக்கு இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி: விமல் வீரவன்ச

சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


யுத்தத்தின் போது படையினர் மற்றும் பொதுமக்கள் பெரும் உள ரீதியான தாக்கங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நூலக கேந்திர மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட வடக்கு பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் பிரவேசிக்க குறித்த குழுக்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறு குறித்த சர்வதேச அமைப்புக்கள் வடக்கிற்குள் பிரவேசித்தால் மீண்டும் மோசமான நிலை ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : www.tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.