நட்டநடுக் கடலில் பனிக்கட்டி பெட்டியில் ஒரு மாத காலம் மிதந்து உயிர் தப்பிய மீனவர்கள் – மியன்மாரில் அதிசய சம்பவம்

உயிராபத்து மிக்க சுறாக்கள் நிறைந்த கடலில் தமது படகு மூழ்கியதையடுத்து பனிக்கட்டி பெட்டியொன்றில் ஏறி மிதந்தபடி மீனவர்கள் இருவர் சுமார் ஒரு மாத காலம் உயிர் வாழ்ந்த அதிசய சம்பவம் மியன்மாரில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய வடக்கு கடற்கரைக்கு அப்பால் 20 பேருடன் பயணம் செய்த மேற்படி படகானது 25 நாட்களுக்கு முன்பு மூழ்கியது. இதன்போது அதில் பயணம் செய்த 20 பேரில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் உயிர் தப்பிய இருவர் ஒரு சிறிய மேசை அளவான பனிக்கட்டிப் பெட்டியின் மீது ஏறி அமர்ந்தனர். அண்மையில் மியன்மார் பிராந்தியத்தைத் தாக்கிய புயல்கள் மற்றும் பருவக் காற்றுக் காலநிலை என்பனவற்றுக்கு தாக்குப் பிடித்து மேற்படி இருவரும் உயிர் பிழைத்துள்ளமை அதிசய சம்பவமாக கருதப்படுகிறது.

கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி தொழிலுக்கு புறப்பட்ட இந்த மீனவர்களின் படகு அலைகளின் கோரத் தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. எதுவித உணவும் நீரும் இன்றி அபூர்வமான முறையில் இவ்விரு மீனவர்களும் மீட்கப்பட்டது மியன்மாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : www.yarl.com

Leave a Reply

Your email address will not be published.