அமெரிக்காவுக்கு உளவு பார்த்த ஆறு பேர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில், அமெரிக்காவிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, ஆறு பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.


இதுகுறித்து அங்குள்ள பழங்குடி இனத்தவர்கள் கூறுகையில், “துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இறந்த ஆப்கனைச் சேர்ந்த இருவரின் உடல்கள் மிரான்ஷா நகரிலும், மேலும் நான்கு பேரின் உடல்கள் மிராலி நகரிலும் கண்டுபிடிக்கப்பட்டன’ என்றனர்.இறந்தவர்களின் அருகில் உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட ஒரு துண்டுச் சீட்டு இருந்தது.

அதில், “அமெரிக்காவிற்காக உளவு பார்த்ததால், இவர்கள் கொல்லப்பட்டனர். வேறு யாரேனும் அமெரிக்காவிற்காக உளவு பார்த்தால், இதே போன்ற நிலைமையை எதிர்கொள்ள நேரிடும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. வாசீரிஸ்தான் பகுதியில், இம்மாதம் மட்டும் 15க்கும் மேற்பட்டவர்கள், உளவு பார்த்ததாக கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பாகிஸ்தானின் பதட்டம் நிறைந்த முகமந்த் பகுதியில், பாக்., பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர். பாக்., போர் விமானங்களும் இப்பகுதியில் தாக்குதல் நடத்தின

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.