பி.எஸ்.என்.எல்., பணியாளர் தேர்தல் 21 மையங்களில் ஓட்டுப் பதிவு

மதுரை:இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல்., பணியாளர்களுக்கு ஓட்டு பதிவு நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 357 பணியாளர்கள் 21 ஓட்டு சாவடிகளில் ஓட்டளிக்கின்றனர்.


பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தில் பணியாளர்களுக்கு இடையேயான தொழிற் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க கூடிய தேர்தல் இன்று நடக்கிறது. இதில் பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன், டெலிகாம் எம்ப்ளாயீஸ் பிராக்ரஸ் யூனியன், என்.எப்.டி.இ., என்.எப்.டி.ஓ., டபிள்யூ. ஆர்.யூ., பகுஜன் டிரேடு யூனியன், எஸ்.சி, எஸ்.டி., பெடரேஷன் யூனியன் உட்பட 14 சங்கங்கள் இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றன.

பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் மொபைல் சின்னத்திலும், என்.எப்.டி.இ., சார்பில் இணைந்த சங்கங்கள் ஒன்பது கரங்கள் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் 21 ஓட்டு சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. அதிக ஓட்டுகளை பெறும் அணியினை சார்ந்த அமைப்புகளுக்கு தொழிற்சங்க அங்கீகாரம் வழங்கப்படும் . இச்சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின் சார்பில் நடக்கும் முக்கிய பேச்சு வார்த்தைகளுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்தலில் 2 ஆயிரத்து 357 பணியாளர்கள் ஓட்டளிக்கின்றனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.