இந்திய விமான படையில் முதல் பெண் நேவிகேட்டர்

புதுடில்லி:இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்கு பின், முதல் முறை யாக இந்தியாவில், பெண் ஒருவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தினத்தன்று, பெண் விமானியாக பணியேற்கும் கவிதா பராலா, அன்று, இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதிக்கு சல்யூட் செய்து மரியாதை செய்வது இன்னொரு சிறப்பம்சம்.


இந்திய விமானப்படையில் 15 ஆண்டுகளுக்கு முன்பே, பெண்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டு, அவர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனாலும், இதுவரை விமானியாகும் அளவுக்கு, எந்த பெண் அதிகாரியும் முன்னேறவில்லை.தற்போது முதல் முறையாக விமான நேவிகேட்டராக கவிதா பராலா பொறுப் பேற்கிறார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவிதா, முதல் பெண் விமானி என்பதோடு மட்டுமின்றி, பல முதல் சாதனைகளையும் செய்துள் ளார்; செய்ய உள்ளதாக உறுதி கூறுகிறார்.

விமானப்படையின் இளம் அதிகாரியாக பொறுப்பேற்ற கவிதா, “ஜெட் சுகோய் – 30 ரக விமானத்தின் முதல் பெண் இணை விமானியாக பொறுப்பேற்றார். விமானத்தின் நேவிகேட்டராக பெண்களும் பொறுப்பேற்பதற்கு, இந்திய விமானப்படையில் எந்த தடையும் இல்லை. இருப்பினும், இதுவரை இப்பதவிக்கு யாரும் வரவில்லை.

இது தொடர்பாக கவிதா கூறியதாவது:ஆந்திர மாநிலம் துண்டிகல்லில் உள்ள விமானப்படை அகடமியில் நான் இணைந்த போது, எந்த பெண் அதிகாரியும் விமானத் தின் நேவிகேட்டர் பொறுப்புக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை புரிந்து கொண்டேன். எனவே, அந்த பொறுப்பை பெறுவதற்கு சபதம் எடுத்துக் கொண்டேன். எனது பயிற்சியை முழுமையாக முடித்து, தற்போது நேவிகேட்டராகிவிட்டேன்.இவ்வாறு கவிதா கூறினார்.

நேவிகேட்டர் பதவி என்பது மிகவும் பொறுப்பு மிக்கதும், சிக்கலானதும் கூட. எல்லா நேரங்களிலும் விமானத்தின் நிலை குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எங்கு, எப்போது, எந்த நேரத்தில் புறப்பட்டு, எந்த நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பது வரை, எல்லா விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும்.குறிப்பிட்ட இடத்துக்கு, குறிப் பிட்ட நேரத்தில் சென்றடையும் வகையில், விமானிக்கு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.

பறக்கும் வழியில் தென்படும் பிரச்னைகளுக்கு அந்த வினாடியே தீர்வு கண்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும்.கடந்த 2008ம் ஆண்டு ஏன் – 32 போக்குவரத்து விமானத்தின் நேவிகேட்டராக பயிற்சியை முடித்தார் கவிதா. தற்போது, ஆக்ரா விமான தளத்தில், குண்டு வீசும் விமானங்கள் மற்றும் நிவாரணக் கால பணிகளில் பயன்படும் விமானங்களில் பயிற்சி பெற்று வருகிறார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.