`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (21.01.09) செய்திகள்

 சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று என்று எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் ஆசியபசுபிக் பிராந்திய தலைவர் வின்சன்ற் புறொசல் கூறியுள்ளதாவது:
சிறிலங்காவை விட்டு பல ஊடகவியலாளர்கள் வெளியேறி வருவதால் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி சிறிலங்கா அரசு அவர்கள் வெளியேறுவதை துடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துலக சமூகம் குடிவருவோரை தடுப்பதில் தீவிரமாக உள்ளது. ஆனால், அவர்கள் சிறிலங்கா அரசு பயங்கரமான சூழ்நிலைகளை உருவாக்குவதை நிறுத்துவதே புத்திசாலித்தனமானது.
சிறிலங்கா அரசின் வன்முறைகளால் தான் அதிக ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று. ஊடகவியலாளர்கள் இல்லாத நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது.
சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் உயர் அதிகாரிகள் நேரடியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதனால் அங்கு வாழ்வது சாத்தியமற்றது என்ற நிலை தோன்றியுள்ளது.
முக்கியமான ஊடகங்களில் பணியாற்றி வந்த பல ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் அரசின் அழுத்தங்களினால் வெளியேறி வருகின்றனர்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை தொடர்ந்து ஐந்து ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது எம்ரிவி தொலைக்காட்சியின் தலைவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சிறிலங்காவில் இருந்து ஊடகவியலாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் வறுமை காரணமாக வெளியேறவில்லை அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகவே வெளிவருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு தலைமை காவற்துறை நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காவற்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தாகவும் காவல்துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்

.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் பொது மகன் ஒருவர், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 2 காவற்துறையினர் மற்றும் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

.

அந்த பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றில் இருந்தே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்

.

அத்துடன்குண்டு வெடித்த இடத்தில் மேலதிகமாக காவல்துறை, இராணுவம், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்படுவதாகவும் நகரப் பகுதிக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இடம் பெற்ற வெவ்வேறு இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது இரண்டு சிவிலியன்கள் கொல்லப்ட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

.

நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொத்துவில் அல் ஹிதாயா பள்ளிவாசலுக்கு அருகில் முஸ்லிம் குடும்பஸ்தரொருவர் கொல்லப்பட்டுள்ளார்

.

நேற்று மாலை அரந்தலாவைக் காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மற்றுமொரு சிவிலியன் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பியுள்ளார் என இது தொடர்பான பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனநாயக நீரோட்டத்தில் இணந்துள்ள அமைப்புகள் பொது மக்களிடமோ அல்லது வர்த்தகர்களிடமோ அல்லது வேறு எவரிடமேனும் கப்பம் கேட்டால் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் எவ்வித வித்தியாசமும் இராது என கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எட்வின் குணதிலக்க நேற்று மட்டக்களப்பு நகரில் வர்த்தகர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்

.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடை பெற்ற இக்கூட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் கட்டிட ஒப்பந்தக்காரர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பொலிஸ் மா அதிபர்

,

”எமக்குக் கிடைத் தகவலின்படி ஆயுத போராட்டத்திலிருந்து ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்துள்ள சில அமைப்புகள் தொடர்ந்தும் கப்பம் மற்றும் வரி என பல்வேறு தரப்பினரிடமும் அறவிடுவதாக அறிய முடிகின்றது.குறிப்பாக ஒப்பந்தக்காரர்களிடம் 10 வீதம் அறவிடுகின்றார்கள். இதனை ஏற்க முடியாது. பயம் ,பீதி காரணமாக இது தொடர்பாக எவரும் நேரடியாக முறைப்பாடுகள் செய்வதாக இல்லை

.

இப்படியான செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதிக்க முடியாது. யாராவது உங்களிடம் கப்பமோ அல்லது வரியோ கோரினால் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தாருங்கள். உரிய நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்என்றார்

.

மட்டக்களப்பு நகர வர்த்தக சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவரான சாந்தி முகைதீன் கருத்து வெளியிடுகையில், தமிழ் வர்த்தகர்களைப் பொறுத்த வரை தைரியமாக, சுதந்திரமாகத் தமது பிரச்சினைகளை எடுத்துக் கூற முடியாத நிலையில் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ,புளொட், .பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி, .பி.டி.பி. உட்பட தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும் இக் கூட்டத்தில் தமது கருத்துக்களை வெளியிட்டனர்
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையை சுற்றியுள்ள அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அமெரிக்கா இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் பீரங்கித்தளம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசு நேற்று நாடாளுமன்றில் கூறியது.
அப்படியானதொரு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு ஒருபோதும் அமெரிக்காவுக்கு இடங்கொடுக்காது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியது.
இது தொடர்பாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மறுத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அரசின் சார்பில் மேற்கண்டவாறு கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர மற்றும் மனோகணேசன் ஆகியோருக்குத் தொடர்ச்சியாகக் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெரேரா நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-
அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்காததால் நாட்டில் அநியாயங்கள் அதிகரித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
தற்போது நீர்கொழும்பு பகுதியில் வெள்ளைவான்களில் சிலர் வந்து மக்களின் விவரங்களைத் திரட்டுகின்றனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் வந்து அந்த வெள்ளை வான்காரர்களைச் சோதித்தனர். அவர்கள் இராணுவத்தினர் என்பது தெரியவந்தது.
வெள்ளைவான்களில் வந்தவர்களால்தான் நீர்கொழும்பில் பூசாரி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர மற்றும் மனோகணேசன் ஆகியோருக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது.
சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க கூட பாதுகாப்பான இடத்தில் வைத்துத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்.
17
ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸ் ஆணைக்குழு உட்பட அனைத்து ஆணைக்குழுக்களையும் அமைத்தால் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்.
அப்படி இல்லாவிட்டால் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மோசடிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம்என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றம் தலையிட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் கோரியுள்ளார்.
சர்வதேச மத்தியஸ்தர்கள் கவுன்ஸில் இயக்குநர்களில் ஒருவராகவுள்ள எஸ்.பிரபாகரன் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு:-
இலங்கைத் தமிழர்களை முற்றிலுமாக அழிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற மனிதப் படுகொலைகளை உலகில் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இலங்கையில் இயல்பு நிலை திரும்ப உலகநாடுகள் முயன்று வருகின்றன. சர்வதேச மத்தியஸ்தர்கள் கவுன்ஸில் இயக்குநர் என்ற முறையில் சாவதேச நீதிமன்றத்தை நான் அணுகுகின்றேன். ஐக்கியநாடுகள் அமைப்பு இதில் தலையிட்டு மனிதத் தன்மையற்ற முறையில் நடைபெற்றுவரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த உத்தரவிடவேண்டும்.
இந்தப் பிரச்சினையில் தீர்வு ஏற்படாததற்கு இலங்கை அரசே முழுப் பொறுப்பு. இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு முன்வைத்த பல்வேறு திட்டங்களுக்கு இலங்கை அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை.
இந்த நிலையில் உலகநாடுகள் .நா.சபையின் மூலம் இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்கும் பணியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்தப் போரில் குழந்தைகள், பெண்களும் விட்டு வைக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையை உலகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காண முடியாது என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதில் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் கொண்டுவர வேண்டும்.
முல்லைத்தீவில் அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புமாறு .நா.சபைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் எஸ் பிரபாகரன் கோரியுள்ளார்.
!!!!!!!!!!!!
வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பார்வையிட அனுமதி வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களது நிலைமையை பார்வையிட ஐக்கிய தேசியக் கட்சி குழுவினருக்கு அனுமதியளிக்குமாறு நேற்றைய தினம் கடிதமொன்றின் மூலம் ஜயலத் ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்

.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

.

தமது இந்த கடித மூல கோரிக்கையின் பிரதிகள் இராணுவத் தளபதி மற்றும் இந்திய உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்

.

மக்கள் பிரதிநிதிகளான தமக்கு மக்கள் நலன்களை கேட்டறிவதற்கான பூரண சுதந்திரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு, கல்முனைக்குடி ஹனிபா வீதியில் வைத்து நேற்றுக் காலை 10 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்தார்.
யூ.எல் கபீர் (வயது – 38) என்ற கான்ஸ்டபிளே காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த கான்ஸ்டபிள் அந்த வீதியினூடாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சமயமே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
தலையிலும், நெற்றியிலும் அவர் காயமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச் சம்பவம் தொடர்பாகக் கல்முனைக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை 2 ஆவது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தமிழ் இளையோர் அமைப்பினர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை Parliament Square முன்பாக 2 ஆவது நாளாக நடத்தினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தமிழ் இளையோரின் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்

.

அவருடன் Kingston நகர சபை உறுப்பினரான யோகன் யோகநாதனும் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோறியும், சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கோரியும் ஐக்கிய இராச்சிய அரசை நோக்கி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் நாளை வியாழக்கிழமை (22.01.2009) பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை நோர்வேயில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் முன்பாக மற்றுமோர் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் இனப் படுகொலையைக் கண்டித்து யேர்மனியின் டுசல்டோவ் நகரில் நாளை மறுநாள் கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது.
யேர்மனி டுசல்டோவ் நகரில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (23.01.09) பிற்பகல் 3:00 மணிக்கு டுசல்டோவ் பிரதான தொடருந்து நிலையம் முன்பாக கண்டன ஊர்வலம் தொடங்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து jan-wellem-platz Düsseldorf இல் 36 மணி நேர உண்ணாநிலைப் போராட்டமும் நடைபெறவுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
france esplande des invalides metro : invalides mUfhikapy; france ehlhskd;wj;jpw;f;F Kd;ghf cs;s jplypy; khiy 3 kzpf;F xd;W$ly; ,yq;ifapy; Nghh; epWj;jjij typAWj;jp,lk;ngwTs;sjhf தமிழ் இளையோர் அமைப்பினர் njuptpj;Js;sjhf nra;jpfs; njuptpf;fpd;wd.
!!!!!!!!!!!!!!!!
india

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. .

இதேபோல் இந்த வழக்கில் இருந்து தன்னைவிடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.1993-94ம் ஆண்டுக்கான செல்வவரியை செலுத்த வில்லை என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித்துறை உதவி ஆணையாளர் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு புகார் செய்தார்

.

இதனையடுத்து நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கோரி ஜெயலலிதா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இன்று ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் புகார் கொடுத்த போது முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததே போதுமானது என்றும், அதற்கான ஆவணங்களை வழங்க தேவையில்லை என்றும் நீதிபதி கூறினார்

.

மேலும் வழக்கில் இருந்து விடுவிக்க ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி 5 மாத காலத்திற்குள் இந்த வழக்கில் சாட்சிகளை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்

.

இதனையடுத்து செல்வ வரி வழக்கில் சாட்சிகள் விசாரணை விரைவில் தொடங்கும் என தெரிகிறது.
!!!!!!!!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை துவங்கியது. ஆளுநர் உரையைப் புறக்கணிக்கும்விதமாக அதிமுக, மதிமுக ஆகிய எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்

.

கடந்த நவம்பர் மாதம் ஒருவார காலம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் இன்று காலை துவங்கியது. கூட்டத்தை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா துவக்கி வைத்தார். அவரது உரையைப் புறக்கணிக்கும்விதமாக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனால், அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் உரையாற்றிய ஆளுநர், இலங்கையில் அப்பாவி மக்களைக் காப்பாற்றும் விதமாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
!!!!!!!!!!!!!!!!!!!
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் பரிசோதிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, சிறிய கோளாறு காரணமாக தோல்வி அடைந்ததாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

.

அணுகுண்டை சுமந்து சென்று தாக்கும் திறன்படைத்த பிரமோஸ் ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் உடையது. ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, நேற்று முன்தினம் பொக்ரானில் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் இதில் உள்ள கைடன்ஸ் சிஸ்டம் திடீரென்று தோல்வி அடைந்ததை அடுத்து, அது குறிப்பிட்ட இலக்கை சென்றடைய முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனினும் ஏவுகணையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் சீர் செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
!!!!!!!!!!!!!!!!
தமிழினத்திற்கு தடைகள் வந்தால் அதை தகர்த்து எறிவோம். விடுதலை சிறுத்தைகள் விடுதலை புலிகளாய் மாறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்ட் நேருஜி கலையரங்கம் அருகில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் இரணியன் பெயரில் சுவரொட்டி ஒன்று ஓட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!
குடிசைப் பகுதி மக்களை இழிவு படுத்தும் வகையில்ஸ்லம்டாக் மில்லியனர்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இசையமைப்பாளர் .ஆர். ரஹ்மான் மீது பாட்னா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது

.

இது தொடர்பாக பாட்னா நகர தலைமை மாஸ்டிரேட் நீதிமன்றத்தில், தபேஸ்வர் விஸ்வகர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில், குடிசை வாழ் மக்களை இழிவு படுத்தும் நோக்கில்ஸ்லம்டாக் மில்லியனர்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

.

இந்த படத்தில் குடிசைவாழ் மக்கள் மோசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இது மனித உரிமைகளை மீறும் செயல் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்

.

எனவே, இப்படத்தில் நடித்த நடிகர் அனில் கபூர், இசையமைப்பாளர் .ஆர். ரஹ்மான் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டுக் கொண்டார்

.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ரவீந்திரசிங் குமார், வழக்கு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

.

‘ஸ்லம்டாக் மில்லியனர்படத்திற்கு இசையமைத்ததற்காக .ஆர். ரஹ்மானுக்குகோல்டன் குளோப்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

.

!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் மிக உயரியதாகக் கருதப்படும்பாரத் ரத்னாவிருதுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன

.

நாட்டில் கடந்த 1954ஆம் ஆண்டு முதல் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 55 ஆண்டுகளில் இதுவரை 44 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

.

கடந்த 2001 ஆம் ஆண்டுப்பின் 7 ஆண்டுகளாக பாரத் ரத்னா விருது எவருக்கும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு தான் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் பீம்சன் ஜோஷிக்கு பாரத் ரத்னா வழங்கப்பட்டது

.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான பாரத் ரத்னா விருதுகள், எதிர்வரும் குடியரசு தினத்திற்கு முதல் நாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

.

இவ்வாண்டுக்கான விருதுகள் அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்களும் அடங்குவர். இதில், முதல்வர் கருணாநிதியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன

.

ஏற்கனவே கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து சோனியா காந்தி, மாயாவதி, முலாயம்சிங் யாதவ் ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!
பாஜக துணைத் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங், அந்த கட்சியிலிருந்து விலகினார்

.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர், பாஜக துணைத் தலைவராக இருந்து வரும் கல்யாண்சிங்

(76).

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாகவும், மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்காகவும் கட்சித் தலைமை மீது கல்யாண் சிங் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சித் தலைவர்களை வெளிப்படையாகவும் விமர்சித்து வந்தார்

.

இரு தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை, டெல்லியில் ரகசியமாகச் சந்தித்து கல்யாண்சிங் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதனால் எந்த நேரத்திலும் பாஜவில் இருந்து கல்யாண் சிங் விலகுவார் எனக் கூறப்பட்டு வந்தது

.

இந்நிலையில், சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பாஜகவில் இருந்து விலகும் அறிவிப்பை, லக்னோவில் கல்யாண் சிங் வெளியிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது

:

பாஜகவில் நான் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தேன். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன் என்னை கலந்தாலோசிக்கவில்லை

.

எனவே கட்சிப் பொறுப்புகளையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், அத்வானி ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியிருக்கிறேன்

.

கட்சியில் இருந்து விலகினாலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் எனக்கில்லை. தனிக் கட்சி தொடங்குவதோ, அல்லது வேறு கட்சியில் பதவி பெறும் திட்டமோ இல்லை

.

எனது மகனுக்கோ, ஆதரவாளர்களுக்கோ மக்களவைத் தேர்தலில் இடம் கேட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறு

.

இவ்வாறு கல்யாண் சிங் தெரிவித்தார்

.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கல்யாண் சிங் விலகியிருப்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துகின்றனர்

.

ஏற்கனவே 1999 ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து கல்யாண் சிங் விலகி, மீண்டும் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!
மறைந்த தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தி, மாசு கற்பிக்க வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்

.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தவறுகளை நாம் திருத்திக் கொண்டு, தவறுகளைச் செய்ய முயல்வோரையும் திருத்த முற்படுவோம் என்று கூறியுள்ளார்

.

திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும், மாற்று கட்சியினரும் பிற தலைவர்களை மதித்திட வேண்டும். மறைந்த தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தவோ, மாசு கற்பிக்கவோ மாட்டோம் என்று சபதம் மேற்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார்

.

அண்மையில் புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலையை விஷமிகள் சிலர் அவமதித்தனர். இதனால் மனம் வருந்தி, தான் இந்த வேண்டுகோளை விடுப்பதாக கருணாநிதி அதில் குறிப்பிட்டுள்ளார்

.

!!!!!!!!!!!!!!!!!!
world
அமெரிக்காவின் 44வது அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தீவிரவாதத்தை தோற்கடித்து சிறப்பான வரலாற்றை உருவாக்கப்போவதாக அப்போது அவர் உறுதி அளித்தார்

.

அமெரிக்காவின் 44வது அதிபராக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா நேற்று பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த வண்ணமிகு நிகழ்ச்சியில், 4 அமெரிக்க முன்னாள் அதிபர்களும் கலந்துகொண்டனர். 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக சுமார் 15 கோடி டாலர் செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பதவியேற்ற பின் பொதுமக்களிடம் உரையாற்றிய ஒபாமா, பலவீனமாக உள்ள அமெரிக்க பொருளாதாரத்தை சீரமைக்க, துணிச்சலான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று கூறினார். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்படும் என்றும், ஆப்கானிஸ்தானத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தப்போவதாகவும் ஒபாமா உறுதியளித்தார். கிறிஸ்துவர், முஸ்லீம், யூதர், இந்துக்கள் உள்ளிட்டோர்களை உள்ளடக்கியதே அமெரிக்கா என்றும், இந்த மதங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முஸ்லீம் நாடுகளைப் பொறுத்தவரை, பரஸ்பர மரியாதை அடிப்படையிலான புதிய வழிமுறை ஒன்றை காண்பது அவசியம் என்றும் ஒபாமா வலியுறுத்தினார்.
!!!!!!!!!!!
நாடு சந்தித்து வரும் கடும் சவால்களைச் சமாளித்து வெற்றிகரமாக புதிய அமெரிக்காவை உருவாக்குவோம் என்று, அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பராக் ஒபாமா சூழுரைத்துள்ளார்

.

அமெரிக்காவின் 44-வது அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பின்னர், ஒபாமா ஆற்றிய உரை வருமாறு

:

மிகப்பெரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் அமெரிக்கா உள்ளது. நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. புதிய அமெரிக்காவை நிர்மாணிக்கும் பணியை இன்றே தொடங்க வேண்டும்

.

நமது பொருளாதாரத்தை மீண்டும் செயல்பட வைக்க, துணிச்சலான நடவடிக்கைகள் தேவை. புதிய வேலைவாய்ப்புகளை மட்டும் உருவாக்குவதுடன் அல்லாமல், வலுவான அடித்தளம் அமைக்கவும் கடினமாக உழைக்க வேண்டும்

.

சூரியனையும், காற்றையும், மண்ணையும் பயன்படுத்தி கார்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளைப் பெறுவோம். அறிவியலுக்கு உகந்த இடம் அளிப்போம்

.

தற்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்க குடிமக்களுக்கு கடமைகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொருவருக்கும் பொறுப்புணர்வு தேவை. பயங்கரவாதத்தை வீழ்த்தி, புதிய வரலாற்றை உருவாக்குவோம்

.

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டு, அந்நாட்டு மக்களிடமே ஈராக் ஒப்படைக்கப்படும். ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதி உருவாக்கப்படும்

.

அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், யூதர்கள், ஹிந்துக்கள் என அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லீம்களை அமெரிக்கா விரோதியாகப் பார்க்கவில்லை

.

பல சவால்களை, ஒற்றுமையாக பாடுபட்டு வெற்றி கண்டு அமெரிக்காவின் புகழுக்கும், பெருமைக்கும் மேலும் வலு சேர்ப்போம்.
!!!!!!!!!!!!!!
சீனாவில் கடந்த ஆண்டின் கடைசி நான்கு மாத காலத்தில் மட்டும் 5,50,000 பேர் வேலை இழந்துள்ளனர்

.

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இந்த வேலை இழப்பு ஏற்பட்டதாக சீன மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்

.

கடந்த 2008 – ம் ஆண்டு டிசம்பர் 31 – ம் தேதி வரை 8.86 மில்லியன் நகரவாசிகள் தங்களுக்கு வேலை இல்லை என பதிவு செய்துள்ளனர்.இதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் வேலை இழந்தோரின் எண்ணிக்கை 5,50,000 மாக அதிகரித்துள்ளது

.

கடந்த 2003 – ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அளவிற்கு வேலை இழப்பு ஏற்பட்டது 2008 ம் ஆண்டில்தான் என்றும், இதில் நகர்ப்புறங்களில் மட்டும் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!

 காசாவுக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், அங்கு தான் கண்ட அழிவுகளையிட்டு மிகுந்த கவலை கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
அங்கு தான் கண்ட காட்சிகள் அதிர்ச்சியாகவும், நெஞ்சை பிளக்கச் செய்வதாகவும் இருந்ததாகக் கூறிய அவர், இஸ்ரேலின் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் என்று தான் கூறும் நடவடிக்கை குறித்து கடுமையான கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான பாலத்தீனர்களின் ராக்கட் தாக்குதல்களும் ஏற்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய ஷெல்களால் நிர்மூலமாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பண்டகசாலையின் முன்பாக அவர் உரையாற்றினார்.
இந்தத் தாக்குதல்களால் தான் வேதனையடைந்துள்ளதாகக் கூறிய அவர், இதற்கு காரணமானவர்கள், அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
காசா மக்கள் தமது வாழ்க்கையை மறுசீரமைத்துக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!
 1 euro = 147.45sl /63.58
1us $ =114.10sl / 49.20in
1swiss fr = 99.57 sl /42.94in
1uk pound =158.21 sl / 68.22in

Leave a Reply

Your email address will not be published.