இலங்கை இராணுவ நடவடிக்கை அரசை விமர்சிப்போர் மீதான குரூரமான தாக்குதல்களுடன் இணைந்து செல்கிறது: ஊடகம்

இலங்கை இராணுவ நடவடிக்கையானது அரசாங்கத்தை விமர்சிப்போர் மீதான குரூரமான தாக்குதல்களுடன் இணைந்து செல்கிறது என்றும் விடுதலைப்புலிகளை அழித்து ஆசியாவின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இலங்கையின் எதிர்பார்ப்புகள் அண்மித்ததாக இல்லை என்றும் வோல் ஸ்ரிட் ஜேர்னல் என்ற ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சமாதானம் இலகுவானதாக இல்லை. புலிகள் தற்போதும் சில பயங்கரமான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும். அவர்கள் பாரியளவிலான அச்சுறுத்தலாக இருக்காவிடினும் இவ்வாறு பயங்கரமான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும். அத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு, தமது உறுதிப்பாடு தொடர்பான பிரச்சினைகளை கொழும்பு எதிர்நோக்குகின்றது என்று “வோல் ஸ்ரிட் ஜேர்னல்” தெரிவித்திருக்கின்றது.

அரசியல் ரீதியான காரணத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த நெருக்கடி என்பதை நினைத்துக் கொண்டால் படையினர் அதிர்ச்சியடைந்திருப்பார்கள் என்று கடந்த வார வெளியீட்டில் வோல் ஸ்ரிட் ஜேர்னல் தெரிவித்திருக்கிறது.

சிறந்த அரசியல் தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுள்ளது. மரபு ரீதியான யுத்த நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தென்படுகின்றபோதும் மோதல் முழுமையாக முடிவுக்கு வருமென சிலரே எதிர்பார்க்கின்றனர். இராணுவத் தீர்வுடன் அரசியல் தீர்வை முன்வைக்குமாறு பல அவதானிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இழந்த பகுதிகளை இராணுவம் கைப்பற்றியுள்ளது. ஆனால் அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்று தமிழ் கூட்டமைப்பு எம.பி. இரா. சம்பந்தன் தெரிவித்ததை வோல் ஸ்ரிட் ஜேர்னல் மேற்கோள் காட்டியுள்ளது.

தமிழர்கள் பலரை ஆயுதப் படையினர் அன்னியப்படுத்தியுள்ளனர். இதனால் மோதலுக்கு தீர்வு காணும் நெருக்கடி அதிகரித்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தை விமர்சிப்பவர் மீதான தாக்குதல்களையும் இது அதிகரிக்கச் செய்துள்ளது.

எவ்வாறாயினும் விடுதலைப்புலிகளை அழித்து ஆசியாவின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இலங்கையின் எதிர்பார்ப்புகள் அண்மித்ததாக இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.