இலங்கை – பாகிஸ்தான் புலனாய்வு தகவல் பரிமாற்றம் -இந்தியாவுக்கு ஆப்பு

இராணுவ ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் இலங்கைக்கு உதவுவதற்கு பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று திங்கள்கிழமை நடைபெற்றுள்ளது.

சகல மட்டங்களிலும் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் கூட்டுறவைக் கட்டியெழுப்புவதன் தேவை குறித்து பாகிஸ்தான் ராவல்பென்டியில் அமைந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சில், அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொதபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளினதும் நல்லுறவு அடிப்படையிலான உதவிகளைக் கருத்திற்கொண்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து விடயங்களிலும் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவுமென உறுதியளித்துள்ள அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பயங்கரவாத அச்சுறுத்தல்களை முகம்கொடுப்பதற்கு இலங்கையுடன் நல்லுறவு அடிப்படையில் இராணுவப் பயிற்சிகள், புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொதபாய ராஜபக்ஷ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த புலனாய்வுத்துறை தொடர்பிலான தகவல் பரிமாற்றங்கள் இந்தியாவுக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனா.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.