திருகோணமலை கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்துக்கு சிறிலங்கா அனுமதி?

தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலை கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் ஏவுகணை கவசத் திட்டத்துக்கு சிறிலங்கா அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க தூதுகுழு ஒன்று கடந்த 13 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டது.

இத்தூதுக்குழு சிறிலங்கா படைத்தரப்பினருடன் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இக்குழு திருகோணமலையில் துணைப்படைக் குழுவின் தலைவர் சந்திரகாந்தனை சந்தித்து உரையாடியது.

மாலைதீவுக்கும் அக்குழு பயணம் மேற்கொண்டது.

இப்பயணத்தின் போது திருகோணமலை கடற் பிரதேசத்தில் ஏவுகணை கவசத் திட்டம் ஒன்றை அமெரிக்காவுக்கு சிறிலங்கா அனுமதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கை மட்டுமே அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாண பாடசாலைகளைப் புனரமைக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கவே அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் கொணண்ட் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.