வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து அகோர பீரங்கித் தாக்குதல்: 17 பேர் குடும்பம் குடும்பமாக படுகொலை; 51 பேர் படுகாயம்

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிள்ளையார் கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு காணிக்குள் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அழகன் பிரசாந்தன் (வயது 12) மற்றும் மாணிக்கவாசகர் சிவயோகம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இருவரும் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் சிறுமி ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதளவுக்கு படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் அப்பகுதியை நோக்கி கடுமையாக நடத்தப்படுகின்றன.

இந்த இரு தாக்குதல்களிலும் சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர்.

மரியதாஸ் (வயது 52)

அகமதி (வயது 11)

மனோன்மணி (வயது 68)

கவிதா (வயது 30)

ஜெயரூபன் (வயது 14)

அன்பரசன் (வயது 07)

கிருபாகரன் (வயது 18)

பத்மநாதன் (வயது 44)

ரவீந்திரன் (வயது 36)

கல்யாணி (வயது 34)

ரவிச்செல்வன் (வயது 33)

அருளானந்தம் (வயது 53)

கனகம்மா (வயது 63)

ரவிச்சந்திரன் (வயது 39)

பரமலிங்கம் (வயது 40)

வக்சலா (வயது 17)

சந்திரராஜ் (வயது 14)

சசிதரன் (வயது 30)

தினேஸ்குமார் (வயது 30)

இரத்தினகுமார் (வயது 28)

யோ.சுரேஸ் (வயது 32)

சி.றெஐிதா (வயது 15)

நிறோசினி (வயது 37)

யோசேப் லியோன் (வயது 47)

சிவகுமார் ராதா (வயது 36)

சீரழகன் (வயது 23)

செ.பிரபு (வயது 32)

ஐ.நாகராசா (வயது 50)

இ.சுதர்சினி (வயது 52)

சி.கல்யாணி (வயது 35)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதில் கொல்லப்பட்ட சிறுவன் அழகன் பிராசந்தனின் தாயார் அவரின் உடன்பிறப்பும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே, விசுவமடு வள்ளுவர்புரத்தில் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சின்னத்துரை மதனகுமார் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதில் துரைசிங்கம் (வயது 55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

சுதந்திரபுரம் கிழக்குப் பகுதி இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 4:40 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 3 சிறுவர்கள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களின் உடல்கள் உடையார்கட்டு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவற்றில் குடும்பமாக பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இத்தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

கண்ணன் (வயது 25)

கருணா (வயது 38)

குகதாசா (வயது 30)

சைதனியா (வயது 18)

தேவன் (வயது 22)

வசந்தா (வயது 42)

கணேசன் (வயது 36)

வேலாயுதம் (வயது 52)

யோகலிங்கன் (வயது 46)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மாறா இலுப்பையிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த கார்த்தி சண்முகசுந்தரம் என்பவர் கொல்லப்பட்டார்.

இதில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

கே.ரவி (வயது 36)

மா.கலைச்செல்வன் (வயது 31)

இ.சுலக்சன் (வயது 7)

கனகலிங்கம் (வயது 55)

வேகானம் (வயது 25)

ஜெயரட்ணா (வயது 11)

அன்பரசன் (வயது 7)

தங்கையா (வயது 57)

மகிந்தன் (வயது 29)

நாகராசா (வயது 39)

மேலும் ஒருவரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்கள் வள்ளிபுனத்தில் உள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களினால் படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடைக்கலமடைந்துள்ள உடையார்கட்டு-சுதந்திரபுரம்-தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து மக்களை படுகொலை செய்யும் தாக்குதல்களை செறிவாக நடத்தி வருகின்றனர்.

இதனால் மக்கள் மீண்டும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.