தரை வழித் தாக்குதலுக்குப் பயன்படும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் உள்ள இலக்குகளை அழிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவ‌ம் இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ராஜஸ்தானின் போக்ரான் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடத்தப்பட்ட இந்த சோதனை திருப்திகரமாக இரு‌ந்ததாகவும், ராணுவ‌ம் எதிர்பார்க்கும் அனைத்து தேவைகளையும் பிரம்மோஸ் ஏவுகணை பூர்த்தி செய்ததாகவும் பாதுகாப்புத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

290 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை உள்ள பிரம்மோஸ் ஏவுகணை கடந்த டிசம்பர் 18ஆம் தேதி வங்கக்கடலில் உள்ள போர்க்கப்பலில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில், போக்ரானில் உள்ள தந்தாத் ஏவுதளத்தில் இருந்து இன்று பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி தீபக் கபூரும் இந்த சோதனையை நேரில் பார்வையிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.