கனடாவில் இந்திய துணை தூதரகம் முன்பாக தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை கண்டித்தும் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரியும் கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் இந்திய துணை தூதரகத்தின் முன்பாக நேற்று மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

கனடிய தமிழ் மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இக்கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை 9:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை இடம்பெற்றது.

ரொறன்ரோவில் கடுங்குளிரான காலநிலை இருந்தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தாயக மக்களின் அவலங்களை காண்பிக்கும் பதாதைகளை தாங்கியவாறு வீதியின் இருமருங்கும் அணிவகுத்து நின்றனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.