குடியரசு தின நாளில் தகர்ப்போம்:6-ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்;தீவிரவாதிகள் பெயரில் கடிதம்

உத்தரபிரதேசம் மாநிலம் நசியாபாத் ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது.ஜெய் சி.முகமது தீவிரவாதிகள் பெயரில் அந்த கடிதம் வந்துள்ளது.அதில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ராம்பூர்,நகிதாபாத்,லக்சார்,ரூர்கி,ரிஷிகேஷ் உள்பட 6-ரெயில் நிலையங்களை தகர்ப்போம்.

உத்தரகாண்டம் மாநிலத்தில் உள்ள கோவில்களும் தகர்க்கப்படும்.குடியரசு தினத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த கடிதம் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து உத்தரபிர தேசம் மற்றும் உத்தரகாண்டத்தில் ரெயில் நிலையம்,கோவில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks :    www.newindianews.com

Leave a Reply

Your email address will not be published.