பாகிஸ்தானில் 6-பள்ளிக்கூடங்கள் குண்டுவீசி தகர்ப்பு;தலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்திலும் முகாம்கள் அமைத்து நாசவேலை மற்றும் ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

கவாத் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக்கூடாது என்று ஏற்கனவே மிரட்டல் விடுத்துள்ளனர்.ஆனால் இதை மீறி சில பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்கள்.அரசும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அனைத்து தனியார் பள்ளிகளையும் மூட வேண்டும் என்று “கெடு” விதித்து இருந்தனர்.

ஆனால் பள்ளிக்கூடங்கள் மூடப்படவில்லை.இதை அடுத்து தலிபான் தீவிரவாதிகள் சவாத்,மிங்கோரா பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.ஒரே நாளில் 6-பள்ளிக்கூடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன.மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததால் குழந்தைகள் உயிர் தப்பியது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தலிபான்கள் 150-அரசு பள்ளிக்கூடங்களை இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.

Source & Thanks : Lankasri.com

Leave a Reply

Your email address will not be published.