நியூஸிலாந்தில் 6.7 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி; சேதம் இல்லை

நியூஸிலாந்தின் கேர்மடக் தீவுப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இப்பூமி அதிர்ச்சி 6.7 ரிச்டர் அளவிலானதென புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கின்றது.

திங்கட்கிழமை அதிகாலை 2.11 மணியளவில் ஏற்பட்ட இப்பூமியதிர்ச்சி “”ராஉல்’ தீவுக்கு 80 கிலோமீற்றர் தூரத்தில் தோன்றியது.

இப்பூமியதிர்வு கிட்டத்தட்ட 10 கிலோமீற்றர் ஆழத்தைக் கொண்டதாக பதிவாகியிருந்தாலும் கடல்கோள் ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பூமியதிர்ச்சி, எரிமலை தாக்கம் என்பன அடிக்கடி இடம்பெறுகின்றது.

கடந்த நான்கு மாதங்களாக வடநியூஸிலாந்திற்கு ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் பாரிய பூமியதிர்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

“”ராஉலின்’ ஒரு பகுதியான “”கேர்மடக்’ தீவுப்பகுதி மக்கள் குடியேற்றம் இல்லாத பகுதியாக காணப்படுகின்றது. இந்நிலப்பகுதி நியூஸிலாந்து பாதுகாப்பு திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்கள் சிலர் ராஉல்தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : www.thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.