நெத்தலியாற்று பாலம் பகுதியில் முன்னேறிய படையினர் மீது புலிகள் தாக்குதல்: 35 படையினர் பலி; 60 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பாலம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர உக்கிர தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 35 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து விடுதலைப் புலிகள் தெரிவிக்கையில், தர்மபுரம் பிரதேசத்தின் நெத்தலியாற்றுப் பாலத்தின் வடமேற்குப் பகுதியிலிருந்தும் தென்கிழக்கு பகுதியிலிருந்தும் இருந்து சிறிலங்கா படையினர் பாரிய எடுப்பில் முன்நகர்வினை மேற்கொண்டிருந்தனர்.

இதில் வடமேற்குப் பக்கமாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்னேற்றத்தினை முறியடித்துள்ளனர். இதில் சிறிலங்கா படையினர் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் தென்கிழக்குப் பகுதியிலிருந்து முன்நகர்ந்த சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.