படைக்கு ஆட் சேர்ப்பதில் சிறிலங்கா துரிதம்

படையினருக்கு ஆட்களைச் சேர்ப்பதில் சிறிலங்கா துரிதமாக இறங்கியுள்ளது. களமுனைகளில் ஏராளமானவர்களை இழந்துள்ள நிலையில், தற்போது பெரும் வெற்றிகளைப் பெற்றுவருவதாக பிரச்சாரம் செய்து வருகின்றது.

இந்நிலையில் இந்த வெற்றியை எடுத்துக் காட்டி படைக்கு இலட்சக் கணக்கானவர்களை இணைத்துக்கொள்ளும் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த வாரம் முதல் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் இராணுவத்திற்கு ஆட்கள் திரட்டும் நடவடிக்கைகள் பெரும் பிரச்சாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வட பகுதி யுத்தத்தில் இராணுவத்தினர் பெற்று வரும் வெற்றியை எடுத்துக் காட்டி ஒலிபெருக்கி மூலம் வெற்றிகளை அறிவித்து இந்த இராணுவத்திற்கு ஆட்கள் திரட்டப்படுகின்றனர். இந்தப் பிரச்சார வெற்றியை நம்பி இரத்தினபுரி மாவட்டத்தில் கிராம மக்களின் பெரும்பாலானவர்கள் இராணுவத்தில் இணைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : sankathi.com

Leave a Reply

Your email address will not be published.