பிரபாகரனின் ‘பங்கர்’ பிடிபட்டது: ராணுவம் சொல்கிறது

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருக்கும் பங்கர்களில் ஒன்றை பிடித்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தர்மாபுரம் என்ற இடத்தில் இந்த பங்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பங்கர் உள்ளது. இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது. அதாவது குடிசை வீடு போல அந்த நுழைவாயில் பகுதியை புலிகள் அமைத்துள்ளனர்.

நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. நன்கு பெயின்ட் செய்யப்பட்ட அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பங்கரிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்குவார்.

பங்கரின் உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.

பிரபாகரன் இலங்கையில்தான் இருக்கிறார் என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை. அவர் தப்பிப் போயிருக்கலாம். அதற்கு நிறைய வழிகள் உள்ளன என்று ஏற்கனவே ராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருப்பது நினைவிருக்கலாம்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.