அகாஷி புதனன்று கொழும்பு வருகை: வன்னி அகதிகளின் நிலைமை குறித்து கவனம் செலுத்துவாராம்

இலங்கைக்கு இவ்வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானின் விசேட சமாதானப் பிரதிநிதி யசூஷி அகாஷி இங்குள்ள மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகவும் வன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்துவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை கொழும்பிற்கு வருகை தரவுள்ள யசூசி அகாஷி ஞாயிற்றுக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அதன் உறுப்பினர்களை சந்திப்பதற்கு அகாஷி திட்டமிட்டுள்ளார் எனவும் ஜப்பானியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு அகாஷி ஆர்வமாகவுள்ளார். தற்போது இந்தியாவில் உள்ள கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா சம்பந்தனிடம் இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.