சட்டி, பானையை கழுவி கவிழ்த்து வையுங்கள்: இராணுவத்தினர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் படுவான்கரையில் சில பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அன்றாடம் உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்களை கழுவி இராணுவத்தினரின் பார்வைக்கு ஏற்றவகையில் அடுக்கி வைக்குமாறு பொதுமக்களைப் பணித்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து இதனை மேற்பார்வை செய்துவருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தாம் உணவு வழங்குவதாகச் சந்தேகிக்கும் இராணுவத்தினர் அதனைத் தடுப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பிலுள்ள கிரான் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.