ஈழப் பிரச்சனை- தமிழகம் ஸ்தம்பிக்கும் 10 நாள் போராட்டம்: ராமதாஸ் ஆவேசம்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு 10 நாட்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கெதண்ட தொல். திருமாவளவன், நேற்று நான்காவது நாளாக தொடர்ந்தநிலையில் நேற்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

உண்ணாவிரத மேடையில் ராமதாஸ் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

“ஈழத்தில் தமிழ் மக்கள் அவதிப்படுவது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் மானக்கேடு. தலைகுனிவு. இனியும் பொறுத்திருக்கவேண்டாம்.ஈழப்பிரச்சினைக்காக இனி எந்த போராட்டம் என்றாலும் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து நடத்துவோம். இரு கட்சிகள் மட்டுமல்ல. பல கட்சிகள் இணைந்து போராடுவோம்.

தனித்து போராட வேண்டிய அவசியமில்லை. ஈழப்பிரச்சினைக்காக போராட மானமுள்ள தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.ஈழப்பிரச்சினைக்கு இந்த உண்ணாவிரதம் சரிப்பட்டு வராது. போராட்ட வடிவத்தை மாற்றுவோம். தமிழக முதல்வரும் ஈழப்பிரச்சனை தொடர்பாக என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். தயாராக இருக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், “இன்று போய் நாளை வா” என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துவிட்டுத்தான் செல்வேன். இலங்கை பிரச்சினை பற்றி, திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் பற்றி நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒருவாரம் அல்லது 10 நாள் நடக்க வேண்டும்.

இந்த போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பிக்க வேண்டும். பஸ், ரெயில் எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் சப்ளை மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் அவரிடமும் கலந்து பேசி முடிவெடுத்து போராட்டம் நடத்துவோம். அந்த போராட்டத்தில் தமிழகம் ஸ்தம்பித்துப் போகணும். லாரி, பஸ் என்று எதுவுமே அன்றைய தினம் இயங்கக்கூடாது. அப்படி ஒரு போராட்டம் ந்டத்துவோம்”என்று ஆவேசப்பட்டார்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Source & Thanks : vanakkammalayasia.com

Leave a Reply

Your email address will not be published.